அதிபர் தர்மன் பிலிப்பீன்சுக்கு பயணம் மேற்கொள்கிறார்

அதிபர் தர்மன் பிலிப்பீன்சுக்கு பயணம் மேற்கொள்கிறார்

1 mins read
d2cd1fdc-e983-46c1-9aa3-66319a7f8841
சிங்கப்பூர், பிலிப்பீன்சுக்கு இடையே அரசதந்திர உறவுகள் ஏற்பட்டு 55 ஆண்டுகள் ஆகியுள்ளதை நினைவுகூரும் விதமாக அமையவுள்ள அதிபர் தர்மனின் பிலிப்பீன்ஸ் பயணம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியரின் அழைப்பை ஏற்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 17வரை பிலிப்பீன்சுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சிங்கப்பூர், பிலிப்பீன்சுக்கு இடையே அரசதந்திர உறவுகள் ஏற்பட்டு 55 ஆண்டுகள் ஆகியுள்ளதை நினைவுகூரும் விதமாக அதிபர் தர்மனின் பயணம் அமையவுள்ளதாக வெளியுறவு அமைச்சு புதன்கிழமை (ஆகஸ்ட் 14ஆம் தேதி) அன்று கூறியது.

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் அதிபர் தர்மன் அந்நாட்டு அதிபர் மார்கோசை மலக்கனாங் அதிபர் மாளிகையில் சந்திப்பார். அங்கு அவருக்கு விருந்துபசரிப்பு நடைபெறும்.

பிலிப்பீன்சில் நீடித்த நிலைத்தன்மையுடன் நீர் பயன்பாட்டுத் திட்டம், மற்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் திட்டம் ஆகியவை குறித்து அதிபர் தர்மனுக்கு விளக்கிக் கூறப்படும். அத்துடன், இரு நாட்டு ஒத்துழைப்பு குறித்தும் அதிபர் பிலிப்பீன்ஸ் நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.

இரு நாட்டு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், கரியமில ஊக்கப் புள்ளிகள் தொடர்பாக இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை அதிபர் தர்மன் சண்முகரத்னம், அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் பார்வையிடுவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்