லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளருக்குச் சிறை

1 mins read
cb027061-cb9e-46d8-9eab-1ca9bda3105f
47 வயது பூ சி சியோங்கிற்கு ஆறு ஆண்டுகள், ஆறு மாதச் சிறைத் தண்டனையும் $32,500 அபராதமும் விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இருவரிடம் லஞ்சம் வாங்கி அவர்கள் கைது செய்யப்படாமல் பார்த்துக்கொண்ட காவல்நிலைய ஆய்வாளருக்குச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

47 வயது பூ சீ சியாங், அந்த இருவரிடம் $32,500 லஞ்சம் வாங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று பூவுக்கு ஆறு ஆண்டுகள், ஆறு மாதச் சிறைத் தண்டனையுடன் $32,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

அபாரதத் தொகையைச் செலுத்தாவிடில் அவருக்குக் கூடுதலாக 14 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

அவர் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

திரு கோர்டெல் சான், திரு வாங் ஹுவாட் ஆகிய இருவரிடமிருந்து பூ லஞ்சம் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

திரு சான் மீது குற்றம் சுமத்தப்பட்டுவிட்டதா அல்லது இனிமேல்தான் குற்றம் சுமத்தப்படுமா என்ற விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.

41 வயது திரு வாங்கிற்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எப்ரல் 9ஆம் தேதியன்று மீட்டுக்கொள்ளப்பட்டன.

வாங்கிற்கு எதிராக இந்த வழக்கு தொடர்பாக, அதே குற்றச்சாட்டுகளை மீண்டும் சுமத்த முடியாது.

இந்த வழக்குடன் தொடர்புடைய நான்காவது ஆடவரான இங் சுவான் செங்கிற்கு 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதியன்று ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள இரவு விடுதி ஒன்றில் சண்டை போட்ட குற்றத்துக்காக சிறை செல்லாமல் இருக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்