தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்போஸ்டின் முதல் காலாண்டு வருமானம் 105.2% ஏற்றம் கண்டு $24.4 மி. ஆனது

1 mins read
0d3bac1b-39b3-4d2a-8137-348147864f8e
சிங்போஸ்டின் ஆஸ்திரேலிய, சிங்கப்பூர் வர்த்தகங்களால் அதன் வருமானம் அதிரித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்போஸ்ட் நிறுவனம் இவ்வாண்டின் முதல் காலாண்டு லாபமாக $24.4 மில்லியன் பெற்றுள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ஈட்டிய $11.9 மில்லியனைக் காட்டிலும் 105.2 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஆண்டு அடிப்படையில் சிங்போஸ்டின் வருமானம் 22.4% கூடி, $404.1 மில்லியனில் இருந்து $494.8 மில்லியனாக அதிகரித்தது என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நடைமுறைச் செலவுகள் 20.1 விழுக்காடு கூடி $391.9 மில்லியனில் இருந்து $470.7 மில்லியனாக உயர்ந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சிங்போஸ்ட் நிறுவனத்தின் வருமான அதிகரிப்புக்கு அதன் சிங்கப்பூர், ஆஸ்திரேலிய வர்த்தகங்களில் ஏற்பட்ட வளர்ச்சி காரணம் என்று அது கூறியது. இது, சிங்போஸ்ட் குழும அனைத்துலக மற்றும் சரக்கு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சமாளித்ததுடன் அதைத் தாண்டி வளர்ச்சி அடைந்ததாகவும் அது தெரிவித்தது.

சிங்கப்பூரை பொறுத்தவரை, இணைய வர்த்தகம் அதிகரித்ததாலும் அஞ்சல் கட்டண அதிகரிப்பாலும் வருமானம் கூடியதாக அது விளக்கியது.

குறிப்புச் சொற்கள்