தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தந்தையர் விடுப்பு எடுத்தோர் எண்ணிக்கை 2022ல் இரட்டிப்பானது

2 mins read
89156f42-3614-42c0-894e-53f891ae39ea
தன்விருப்ப அடிப்படையில் கூடுதலாக இரு வார தந்தையர் விடுப்பு இவ்வாண்டு அறிமுகம் கண்டது. - கோப்பு படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சம்பளத்துடன் கூடிய தந்தையர் விடுப்பு 2013ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து அந்த விடுப்பைப் பயன்படுத்திய தந்தைமார்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது.

குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டு இங்குள்ள மொத்தத் தந்தைமார்களில் இருவரில் ஒருவர் அந்த விடுப்பைப் பயன்படுத்தி உள்ளதாக தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவு தெரிவித்து உள்ளது.

அதற்கு முன்னர் வரை ஏறத்தாழ கால்வாசிப் பேர் (25 விழுக்காடு) தந்தையர் விடுப்பு வசதியைப் பயன்படுத்தி வந்த நிலையில், 2022ஆம் ஆண்டு அந்த விகிதம் இரட்டிப்பானதாக அது கூறியது.

தந்தையர் விடுப்பைப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை 53 விழுக்காட்டுக்கு அதிகரித்த நிலையில், அந்த ஆண்டு தாய்மார்கள் எடுத்த பிள்ளைப்பேறு விடுப்பு 74 விழுக்காடாக இருந்தது.

பிள்ளை பெற்ற தமது மனைவியைப் பார்த்துக்கொள்ளவும் பிறந்த குழந்தையை பராமரிப்பது எப்படி எனத் தெரிந்துகொண்டு உதவவும் ‘அப்பா’ ஆனோருக்குத் தந்தையர் விடுப்பு கைகொடுக்கிறது.

இந்த ஆண்டில், தன்விருப்ப அடிப்படையிலான கூடுதல் இருவார தந்தையர் விடுப்பு அறிமுகம் கண்டது.

ஆயினும், தந்தையர் விடுப்புச் சலுகையை அனுமதிக்கும் நிறுவனங்களில் வேலை செய்யும் தந்தைமார்களில் சிலர், அந்தக் கூடுதல் விடுப்பை வருங்காலத் தேவைக்காகச் சேமிப்பது தெரிய வந்துள்ளது

அவ்வாறு சேமிக்க விரும்புவோரில் ஒருவர் மண்டாய் வனவிலங்குக் குழுமத்தில் நிதி மேலாளராக வேலை செய்யும் ஆண்ட்ரு லாம், 38.

கடந்த ஜனவரி மாதம் தந்தையான அவர், இருவார தந்தையர் விடுப்புச் சலுகையை அப்போது பயன்படுத்திக்கொண்டார்.

கூடுதலாக அனுமதிக்கப்படும் இருவார விடுப்பை, தமது பிள்ளைக்கு உடல்நலக் குறைவு ஏற்படும்போதோ அல்லது குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும்போதோ பயன்படுத்தும் எண்ணத்தில் உள்ளார் திரு ஆண்ட்ரு.

குறிப்புச் சொற்கள்
தந்தைதாய்குழந்தை