$800 மி. மதிப்புள்ள எரிசக்தி, சுற்றுச்சூழல் வாய்ப்புகள்: மூன்று நிறுவனங்கள் ஆய்வு

1 mins read
9c78d2dd-7f2b-4e9d-b4dd-80a7444b30f2
கரிமம் இல்லாத மின்சார உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிபொருள், பசுமை கட்டடம் போன்ற திட்டங்களில் கெப்பல் நிறுவனம் கவனம் செலுத்தவிருக்கிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் மாற்று எரிபொருள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தொடர்பான 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்கள் குவிந்துகிடக்கின்றன. இவற்றைக் கண்டறிய கெப்பல் நிறுவனம், ஏடிபி எனப்படும் ஏஷியன் டெவலப்மண்ட் வங்கி, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் (எண்டர்பிரைஸ்எஸ்ஜி) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கெப்பல், அத்தகைய திட்டங்களை உருவாக்கி, மேற்கெள்ளும். இதில் கரிமம் இல்லாத மின்சார உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிபொருள், பசுமைக் கட்டடங்கள் போன்ற திட்டங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.

மூன்று நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் கரிம வெளி யேற்றத்தைக் குறைக்க வழி வகுக்கும் என்று பிரதான பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட கெப்பல் நிறுவனம் தெரிவித்தது.

தொடக்கத்தில் 2025க்கும் 2030க்கும் இடையே மொத்தம் 800 மில்லியன் யுஎஸ் டாலர் மதிப்பிலான வாய்ப்புகளை மூன்று நிறுவனங்களும் கண்டறியும்.

இது குறித்து விளக்கமளித்த கெப்பல் உள்கட்டமைப்பு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியான சிண்டி லிம், கெப்பல் தொழில்நுட்ப நிபுணத்துவங்களையும் பெரிய அளவிலான நீடித்த நிலைத்தன்மைமிக்க உள்கட்டமைப்புகளுக்கு தீர்வையும் வழங்கும் என்று கூறினார்.

இதற்குப் பங்காளிகளிடமிருந்து வெளிப்புற முதலீடுகள் திரட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்