மோசடிக் குற்றங்களுக்கு எதிராகக் காவல்துறையும் உள்ளூர் வங்கிகளும் இணைந்து நடத்திய நடவடிக்கையில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
65 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நடவடிக்கை பிப்ரவரி மாதத்தில் நடுப்பகுதியிலிருந்து மார்ச் மாதம் தொடக்கம் வரை நடத்தப்பட்டது.
மோசடி மூலம் பெறப்பட்டதாக நம்பப்படும் ஏறத்தாழ $1.9 மில்லியன் தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அரசாங்க அதிகாரிகளாக ஆள் மாறாட்டம் செய்பவர்கள், முதலீடு மற்றும் வேலை மோசடிகளைப் புரிந்தவர்கள் ஆகியோரைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் காவல்துறை சனிக்கிழமை (மார்ச் 22) அறிக்கை வெளியிட்டது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 300க்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டு முடக்க காவல்துறையுடன் வங்கிகள் ஒன்றிணைந்து செயல்பட்டன.
மோசடிக்காரர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்ததாகச் சந்தேகிக்கப்படுவோரைப் பிடிக்க சிங்கப்பூரெங்கும் அதிரடி நடவடிக்கை நடத்தப்பட்டது.
அந்த வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி கள்ளப் பணம் நல்ல பணமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பெண்களும் 20 ஆண்களும் அடங்குவர்.
அவர்கள் 18 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.