நியூயார்க்: ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்குக் கீழ் செயல்படும் அமைப்புகள் பல தங்களது உதவிகளைக் குறைத்து வருகிறது.
மேலும் அந்த அமைப்புகளில் வேலை செய்பவர்களையும் அவை ஆள்குறைப்பு செய்யத் தொடங்கியது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஐக்கிய நாட்டு அமைப்புகளுக்கு வழங்கும் நன்கொடை நிதியைப் பெரிய அளவில் குறைத்தார்.
இதனால் உலக அளவில் உதவிகளைப் பெற்று வந்த அமைப்புகள் தற்போது போதிய நிதி இல்லாமல் தடுமாறி வருகின்றன.
குறிப்பாகக் குழந்தைகள், சுகாதாரம், அகதிகள், எளிதில் பாதிக்கக்கூடிய மக்கள், போர்ப் பகுதிகளில் உள்ளவர்கள் ஆகியோருக்கு உதவி வரும் அமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கீழ் உள்ள உணவு அமைப்பு கிட்டத்தட்ட 30 விழுக்காடு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்கிறது.
அதேபோல் அகதிகளுக்கான அமைப்பிலும் 30 விழுக்காடு ஆட்குறைப்பு செய்யப்படவுள்ளது. மேலும் அந்த அமைப்பில் உள்ள மூத்த தலைமைத்துவ அதிகாரிகளில் 50 விழுக்காட்டினரைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

