‘ஓபியு’ கருவியுடன் சாலையோரக் கார்நிறுத்தும் கட்டணச் சோதனைத் திட்டம்

‘ஓபியு’ கருவியுடன் சாலையோரக் கார்நிறுத்தும் கட்டணச் சோதனைத் திட்டம்

1 mins read
0a7cc622-fa1f-4832-89c4-f8784bce3224
வாகனத்தில் உள்ள ஓபியு கருவியின் தொடுதிரையைக் கொண்டு சாலையோரங்களில் கார்நிறுத்தும் கட்டணத்தைச் செலுத்தும் சோதனைத் திட்டம் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த அவற்றில் உள்ள ஓபியு (OBU) கருவியின் தொடுதிரையைப் பயன்படுத்தும் சோதனைத் திட்டம், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்கியது.

அப்போது 1,000 ஓட்டுநர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்ட ஓபியு கருவிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சிங்கப்பூர் முழுவதும் உள்ள ஏறத்தாழ 644 கார்நிறுத்தகங்களில் உள்ள 19,000 இடங்கள் சோதனையில் இடம்பெற்றன.

நகர மறுசீரமைப்பு ஆணையம் (யுஆர்ஏ) நிர்வகிக்கும் சாலையோரத்தில் உள்ள பெரும்பாலான கார்நிறுத்தத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை இந்த எண்ணிக்கை பிரதிபலித்தது.

மின்னிலக்க முறையில் கார்நிறுத்தக் கட்டணம் செலுத்தும் சோதனை முயற்சி, பங்கேற்கும் வாகன ஓட்டிகளுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டங்களில் ஒன்றாகும்.

செயற்கைக் கோள்களைக் கொண்டு இயங்கும் எதிர்கால மின்னிலக்க சாலைக் கட்டண முறைக்கு (இஆர்பி 2) முழுமையாக மாறுவதற்கு முன்பாக வாகன ஓட்டிகளுக்கு இந்த அனுபவம் வழங்கப்படுகிறது.

நவம்பர் மாதம் வரை நடைபெறும் சோதனை முயற்சியில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழும் பங்கேற்றது.

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஓபியு கருவிகளில் உள்ள தொடுதிரைகளில் மட்டுமே இந்த மின் கட்டண முறை இயங்கும். ‘இஆர்பி’ கட்டணங்கள் உட்பட போக்குவரத்து தகவல்களை வழங்கும் கைப்பேசிகளில் உள்ள செயலிகளில் இந்தக் கட்டணமுறை செயல்படாது.

குறிப்புச் சொற்கள்
வாகன நுழைவுகார் நிறுத்தப் பேட்டைசாலைக் கட்டணம்கட்டணம்நிலப் போக்குவரத்து ஆணையம்