சிங்கப்பூரில் உணவு நிலையங்களில் சாப்பிட்ட பிறகு தட்டைத் திருப்பிக் கொண்டுபோய் வைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜூன் 1ஆம் தேதி முதல் அந்த நடவடிக்கை அமலுக்கு வருகிறது.
தட்டைத் திருப்பி வைக்காதவர்களுக்குத் தற்போது ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
முதல் முறை தட்டைத் திரும்பி வைக்கத்தவறியவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் தரப்படும்.
இரண்டாவது அல்லது தொடர்ந்து அதே தவற்றை செய்பவர்களுக்கு அபராதம் அல்லது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
உணவங்காடி நிலையங்களில் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தட்டைத் திருப்பி வைக்கும் திட்டம் நடப்புக்கு வந்தது.


