தேர்தல் விளம்பரங்களுக்கு கடுமையான விதிமுறைகளை தேர்தல் துறை வெளியிட்டது

தேர்தல் விளம்பரங்களுக்கு கடுமையான விதிமுறைகளை தேர்தல் துறை வெளியிட்டது

2 mins read
e7047750-247d-4d92-b883-265f3c6a5467
துணைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுடன் புதுப்பிக்கப்பட்ட சட்டம் ஜூன் 14 முதல் நடைமுறைக்கு வரும். - படம்: தேர்தல் துறை

அடுத்த பொதுத் தேர்தலில், தேர்தல் விதிகளை மீறும் இணைய தேர்தல் விளம்பரங்களை அகற்ற தனிநபர்களுக்கும் சமூக ஊடக நிறுவனங்களுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி வழிகாட்டுவார்.

இத்தகைய விளம்பரங்கள் சிங்கப்பூர் பயனாளர்களிடம் சென்று சேர்வதையும், கூடுதல் செய்திகள் இங்கு பகிரப்படுவதையும் இது கட்டுப்படுத்தும்.

தலைமைத் தேர்தல் அதிகாரி பாரபட்சமின்றியும் சுமுகமாகவும் தேர்தல் நடத்தப்படுவதை மேற்பார்வையிடுவதற்காக பிரதமரால் நியமிக்கப்படும் பொதுச் சேவை அதிகாரியாவர்.

மேலும், வாக்குச் சீட்டில் வாக்காளர் தமது தேர்வைக் குறிப்பிட அதிக இடம் இருக்கும்.

தேர்தல் துறை வெள்ளிக்கிழமை (மே 31) அன்று வெளியிட்ட அறிவிப்பில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

2023ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் கீழ், துணைச் சட்டத் திருத்தங்களுடன் ஜூன் 14 ஆம் தேதி அன்று நடைமுறைக்கு வரும்.

2023 அதிபர் தேர்தலின்போது குறிப்பிடப்பட்ட தேவைகளுடன் ஒத்துப்போவதற்கு, “இந்த திருத்தங்களை செயல்படுத்த” மாற்றங்கள் தேவை என்று தேர்தல் துறை கூறியது.

விளம்பரத்தை வெளியிடுவதில் “முழுப் பங்காற்றிய” அனைவரது முழுப் பெயர்களும் தற்போது குறிப்பிடப்பட வேண்டும்.

விளம்பரத்துக்கு அங்கீகாரம் அளித்தவர்கள், உள்ளடக்கத்தை அங்கீகரித்தவர்கள், அது வெளியிடப்பட செயலாற்றியவர்கள் ஆகியோரை உள்ளடக்கும். அச்சு விளம்பரங்களைப் பொறுத்தவரை, அச்சகமும் அடையாளம் காணப்பட வேண்டும்.

பணம் செலுத்தப்பட்ட விளம்பரங்களுக்கு, பணம் செலுத்திய அனைவரது முழுப் பெயர்களும், “ஆதரவாளர்” போன்ற அவர்களது பங்களிப்புடன் குறிப்பிடப்பட வேண்டும்.

“இது பிரசாரச் செலவு வரம்பின் கீழ் பல்வேறு வகையான கட்டணங்களை செலுத்துவதில் விதிமுறை கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்கிறது,” என்று தேர்தல் துறை குறிப்பிட்டது.

கட்டணமின்றி, தனிப்பட்ட முறையில் இணைய விளம்பரங்களை வெளியிடும் வேட்பாளர்களாகவோ, தேர்தல் நிர்வாகியாகவோ இல்லாத சிங்கப்பூர் குடிமக்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இணையம் தவிர்த்த தேர்தல் விளம்பரங்களைச் செய்ய விரும்பும் அரசியல் கட்சிகள், கட்சி அல்லது கட்சி சார்ந்த சின்னங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தலை நடத்துவதற்கான உத்தரவாணை வழங்கப்படுவதற்கு முன்னர் தெரிவிக்க வேண்டும்.

தேர்தலை நடத்துவதற்கான உத்தரவாணை பிறப்பிக்கப்பட்ட 12 மணி நேரத்திற்குள் இதைச் செய்யவேண்டும்.

அதேநேரத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அவ்விவரங்கள் இணையத்தில் வெளியிடப்படும்.

தேர்தலை நடத்துவதற்கான உத்தரவாணை வழங்குவதற்கும் பிரசாரக் காலம் தொடங்குவதற்கும் இடைப்பட்ட காலத்தில், அத்தகைய சின்னங்களைக் கொண்ட எந்தவொரு புதிய தேர்தல் விளம்பரங்களும் அனுமதிக்கப்படாது.

பிரசார காலத்தில், வேட்பாளர்கள், தேர்தல் நிர்வாகி ஆகியோரால் நியமிக்கப்பட்ட தனிநபர்களே இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட முடியும்.

சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை இயக்குநர் ஹான் கோக் ஜுவான் ஏப்ரல் 1ஆம் தேதி தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

2025 நவம்பர் மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

குறிப்புச் சொற்கள்
தேர்தல்பொதுத் தேர்தல்சிங்கப்பூர்தேர்தல் துறைசட்டம்