தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் - ஜோகூர் டாக்சி சேவை: இணையத்தில் முன்பதிவு

1 mins read
1f46ce16-a781-473b-acdf-a5b65f05c09e
தெம்பனிஸ் வட்டாரத்தில் பிப்ரவரி மாதம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்டிரைட்ஸ் பிரிமியர் டாக்சி வாகனங்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்குச் செல்ல இணையம் வழியாக டாக்சி முன்பதிவு செய்துகொள்ளும் சேவையை ஸ்டிரைட்ஸ் பிரிமியர் டாக்சி தொடங்கியுள்ளது. சிங்கப்பூரின் எஸ்எம்ஆர்டியின்கீழ் செயல்படும் அந்த நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் உள்ள படிவத்தின் வழியாக வாடிக்கையாளர்கள் முன்பதிவுகளைச் செய்யலாம்.

சிங்கப்பூரின் எந்த இடத்திலிருந்தும் பயணிகளை டாக்சிகள் ஏற்றிச் செல்லும் என்று ஃபேஸ்புக் பதிவில் செப்டம்பர் 19 அன்று அந்நிறுவனம் அறிவித்தது.

சிங்கப்பூரிலிருந்து லார்கின் சென்ட்ரல் செல்ல $80. சாங்கி அல்லது சிலேத்தார் விமான நிலையங்களிலிருந்து அங்கு செல்ல $120 கட்டணமாகும். சிங்கப்பூரின் பான் சான் டாக்சி நிறுத்தத்திலிருந்து ஜோகூர் செல்ல கட்டணம் $120

முன்பதிவுகளின்றி ஜோகூரின் லார்கினிலிருந்து சிங்கப்பூரின் எந்த இடத்திலும் இறங்க ஆரம்பக் கட்டணம் $60லிருந்து தொடங்குகிறது.முன்பதிவு செய்திருந்தால் $70. பான் சான் டாக்சி நிறுத்தம் வரவேண்டுமென்றால் கட்டணம் $36.50 (120 ரிங்கிட்).

போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், ஜோகூரின் மற்ற இடங்களில் டாக்சிகள் செல்வதற்கு மலேசியாவுடன் சிங்கப்பூர் பேராளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையிலும் எல்லை தாண்டிய டாக்சி சேவை திட்டத்தில் தற்போது 200 டாக்சிகள் உரிமம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே டாக்சிகள் பயணிகளை இறக்கிவிட அனுமதி உள்ளது. சிங்கப்பூர் டாக்சிகள் லார்கின் சென்ட்ரலிலும் ஜோகூர் டாக்சிகள் ரோச்சோர் வட்டாரத்தில் உள்ள பான் சான் டாக்சி நிறுத்தத்திலும் பயணிகளை இறக்கிவிட வேண்டும்.

குறிப்புச் சொற்கள்