சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 3) இரவு, விண்ணில் பிரகாசமாகக் காட்சி அளித்த பெருநிலவைக் (உல்ஃப் சூப்பர்மூன்) பலர் கண்டு மகிழ்ந்தனர்.
இதுவே 2026ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தோன்றிய முதல் பெருநிலவு.
பலர் அதைப் படம், காணொளி எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டனர்.
இவ்வாண்டில் இதே போன்ற பெருநிலவை மூன்று முறை பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது நவம்பர் 24ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு தோன்றக்கூடும் என்று கூறப்படுகிறது.
வானம் மேகமூட்டமாக இருந்ததால் பெருநிலவைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்று 60 வயது திரு ஏ. கண்ணன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

