சிங்கப்பூரர் ஆட்ரி ஃபாங்கைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர், அவரது மத்திய சேமநிதி (மசேநி) சேமிப்புகளிலிருந்து பயன்பெறக்கூடியவர் என்று ஸ்பானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
திருவாட்டி ஃபாங், 39, மாண்டுகிடக்கக் காணப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, சிங்கப்பூரரான மிட்சல் ஓங், 43, ஸ்பெயினின் அலிகாண்டே பகுதியில் கைது செய்யப்பட்டார்.
ஏப்ரல் 10ஆம் தேதியன்று, திருவாட்டி ஃபாங்கின் உடலில் 30க்கும் மேற்பட்ட கத்திக்குத்துக் காயங்களும் மற்ற காயங்களும் காணப்பட்டன.
திருவாட்டி ஃபாங், அவரது மத்திய சேமநிதிச் சேமிப்புகளிலிருந்து பயன்பெறக்கூடியவராக திரு ஓங்கை நியமித்திருந்ததை, மசேநி மே 16ஆம் தேதி உறுதிசெய்ததாக, ‘சிஸா’ நகரில் உள்ள நீதிமன்றம் ஒன்று கூறியது.

