தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்டெல் சேவைத் தடையின்போது அவசரநிலைக் கட்டமைப்பு இயங்கவில்லை: ஜனில் புதுச்சேரி

1 mins read
ad121289-1051-42e9-86c9-e115d352c99c
சிங்டெல் தொலைபேசிச் சேவையில் அக்டோபர் 8ஆம் தேதி தடங்கல் ஏற்பட்டது. சி - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்டெல் தொலைபேசிச் சேவையில் அக்டோபர் 8ஆம் தேதி தடங்கல் ஏற்பட்டது. சில மணி நேரம் நீடித்த அந்த பிரச்சினையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

சேவைத் தடையின்போது அவசரகாலக் கட்டமைப்பு வேலை செய்யவில்லை என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டுக்கான மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி திங்கட்கிழமை (நவம்பர் 11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“ஆரம்பகட்ட விசாரணையில், இரண்டு தொலைத்தொடர்பு கட்டமைப்புகளில் ஒன்றில் தொழில்நுட்பப் பிரச்சினை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“அந்த இரண்டு கட்டமைப்புகளும் வெவ்வேறு இடங்களில் இருந்தன. ஒரு கட்டமைப்பு வேலை செய்யத் தவறினால் உடனடியாக மற்றொன்று வேலை செய்ய வேண்டும்.

“ஆனால் அன்று அவசரநிலைக் கட்டமைப்பு வேலை செய்யவில்லை, இதனால் தடங்கல் ஏற்பட்டது,” என்று திரு ஜனில் கூறினார்.

மேலும், சிங்டெல் கட்டமைப்பில் ஊடுருவல் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்டெல் சேவைத் தடை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு திரு ஜனில் பதிலளித்தபோது இந்த தகவலை வெளியிட்டார்.

அக்டோபர் 8ஆம் தேதியன்று பாதிப்படைந்த தொலைபேசி எண்களில் சிங்கப்பூர் காவல்துறை (999), சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (995) ஆகியவற்றின் அவசரத் தொலைபேசிச் சேவை எண்களும் அடங்கும்.

கேகே மகளிர், சிறார் மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை, சிம்ப்ளிகோ, வங்கிகள் ஆகியவற்றின் தொலைபேசிச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்