தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சிகரெட்டுகளைப் பதுக்க இளையர்களை ஈர்க்கும் கும்பல்

2 mins read
d97467a5-7386-4598-95ee-e89d39da190b
2024 முதல் இதுவரை மின்சிககெரட் பதுக்கி வைக்கப்படும் எட்டு இடங்களைச் சுகாதார அறிவியல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரில் மின்சிககெரட்டுகளை விற்கும் குற்றக் கும்பல்கள் மின்சிகரெட்டுகளைப் பதுக்கி வைக்க இளையர்களைப் பயன்படுத்தி வீடுகளை வாடகைக்கு எடுப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வேலைத் திட்டம் என்று கூறி இளையர்களை அந்தக் கும்பல் ஈர்ப்பதும் அந்த மோசடித் திட்டத்தில் சேர்ந்து வீட்டை வாடகைக்கு எடுத்தவர்கள் சோதனையின்போது சிக்கிக்கொள்வதும் தெரியவந்துள்ளது.

வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதும் அதனை வாடகைக்கு எடுத்தவர் வீட்டின் சாவிகளையும் அதன் கட்டுப்பாட்டையும் குற்றக் கும்பல்களிடம் கொடுத்து விடுவதே அந்தத் திட்டம்.

வீட்டின் ஓராண்டுக்கான வாடகைப் பணத்தைச் செலுத்தியபோதும் அந்தக் கும்பல்கள் கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே அங்குத் தங்கி இருக்கும். தங்களின் செயல்களை அதிகாரிகள் கண்டுபிடிப்பதைத் தவிர்க்கக் குறுகிய காலத்திலேயே அவர்கள் வேறு இடத்திற்கு மாறிவிடுவர்.

அந்தத் திட்டத்தை அறிந்த சுகாதார அறிவியல் ஆணையம், சென்ற ஆண்டு முதல் இதுவரை மின்சிககெரட்டு பதுக்கி வைக்கப்படும் எட்டு இடங்களைக் கண்டுபிடித்துள்ளது.

அது தொடர்பாக விளக்கிய ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர், மின்சிகரெட் தொடர்பான விளம்பரங்களை நீக்க ‘டெலிகிராம்’ தகவல் தளத்துடன் இணைந்து ஆணையம் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், பொதுமக்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் மின்சிகரெட் பதுக்கி வைக்கப்படும் வீடுகள் கண்டுபிடிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

“இணையத்தளம், சமூக ஊடகம், தகவல் தளங்கள் போன்றவற்றில் செய்யப்படும் சட்டவிரோத விளம்பரங்கள் மற்றும் பதிவுகளைக் கண்டறிந்து நீக்குவதில் ஆணையம் இரவு பகலாகத் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது,” என்றார் அந்தப் பேச்சாளர்.

2024 முதல் இதுவரை மின்சிகரெட் விளம்பரங்கள் தொடர்பிலான 600க்கும் மேற்பட்ட டெலிகிராம் குழுக்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

இளையர்களை ஈர்க்கும் சட்டவிரோதக் கும்பல்களின் திட்டம்குறித்து ஜூலை பிற்பகுதியில் சாவ்பாவ் சீன நாளிதழின் உதவியுடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முதன்முதலாக அறிந்தது.

அந்தக் குற்றக் கும்பல் கட்டமைப்பில் போலி நிறுவனங்கள் இருப்பதும் கட்டுமான வர்த்தகத்தில் ஈடுபடுவதாக அவை தம்மைக் காட்டிக்கொள்வதும் தெரியவந்தது.

வீட்டை வாடகைக்கு எடுப்பவர்கள் அந்த நிறுவனங்களின் ஊழியர்களாகப் பதிவு செய்யப்படுவர். சோதனையின்போது அதிகாரிகளிடம் பிடிபட்டால், வெளிநாட்டு ஊழியர்களைத் தங்க வைக்க வீடுகளை வாடகைக்கு எடுப்பதாக அந்த ‘நிறுவன ஊழியர்கள்’ தெரிவிப்பர்.

இளையர்களை ஈர்க்க, டெலிகிராம் மற்றும் இன்ஸ்டகிராம் தளங்களில் அந்தக் கும்பல் வேலை தொடர்பான விளம்பரங்களைச் செய்வதும் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்