தைவான் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: $750 மில்லியன் திட்டத்தைக் கைப்பற்றிய எஸ்டி என்ஜினியரிங்

தைவான் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: $750 மில்லியன் திட்டத்தைக் கைப்பற்றிய எஸ்டி என்ஜினியரிங்

1 mins read
7aa2eaa7-7b64-4853-84a3-da509ead5a13
முன்னதாக 2026 ஜூலை மாதத்தில் ‘தாவோயுவான் எம்ஆர்டி பிரவுன் லைன்’ ரயில் பாதைத் திட்டத்திற்கான 840 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சேவை ஒப்பந்தத்தை எஸ்டி என்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

எஸ்டி என்ஜினியரிங் நிறுவனத்தின் நகர்ப்புறத் தீர்வுகள் பிரிவு, தைவானின் வடமேற்கில் அமைந்திருக்கும் தாவோயுவான் நகராட்சியில் மெட்ரோ ரயில் பாதையை விரிவாக்கம் செய்வதற்கான $750 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது.

தாவோயுவான் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் 2026ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் தொடங்கி ஏழாண்டுகளுக்கு நீடிக்கும் என்று அந்த உலகளாவிய தொழில்நுட்பக் குழுமம் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) தெரிவித்தது. ஹியுண்டாய் ரோட்டம் நிறுவனத்துடனான கூட்டுத்திட்டத்தில் இது ஓர் அங்கம் என்று கூறப்பட்டது.

ஒட்டுமொத்தத் திட்ட நிர்வாகம், ஒருங்கிணைந்த கட்டமைப்பு, ரயில் மின்னிலக்கத் தீர்வுகள், தானியக்கக் கட்டண நடைமுறை போன்றவற்றிற்கு எஸ்டி என்ஜினியரிங் பொறுப்பேற்கும். ஹியுண்டாய் ரோட்டம், மின்சார விநியோக அமைப்பையும் ரயில் பெட்டிகளையும் வழங்கும்.

தாவோயுவான் மெட்ரோ ரயில் விரிவாக்கம் 7.2 கிலோமீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்படும். அது, ஐந்து நிலையங்களைக் கொண்டிருக்கும். இந்தத் திட்டம் உள்ளாட்சி அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட முதல் மெட்ரோ பாதை என்று உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

முன்னதாக, 2026 ஜூலை மாதத்தில் எஸ்டி என்ஜினியரிங், 11.4 கிலோமீட்டர் நீளமுள்ள ‘தாவோயுவான் எம்ஆர்டி பிரவுன் லைன்’ ரயில் பாதைத் திட்டத்திற்கான 840 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சேவை ஒப்பந்தத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்