தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு ஏற்பாடு

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் 2026

2 mins read
1eba13f1-2418-4e10-98fa-5204016357db
தெலுக் பிளாங்கா சமூக மன்றத்தில் மார்ச் 28ஆம் தேதி, பல்வேறு போட்டிகளின் இறுதிச் சுற்றும் பரிசளிப்பு விழாவும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: பிக்சாபே

தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் 38ஆம் ஆண்டு தமிழ் மொழித்திறன் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இந்தப் போட்டிகளின் தொடக்கச் சுற்றுகள், வாரயிறுதி நாள்களில் தெலுக் பிளாங்கா சமூக மன்றப் பன்னோக்கு மண்டபங்களில் நடைபெறும்.

தொடக்க நிலை 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியின் முதல் சுற்று, பிப்ரவரி 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்.

இந்தப் போட்டியைத் தவிர்த்து மற்ற போட்டிகள் அனைத்தும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்.

ஜனவரி 31ஆம் தேதி, தொடக்கநிலை 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியின் முதல் சுற்றும் தொடக்கநிலை 4ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியின் இறுதிச் சுற்றும் நடைபெறும்.

பிப்ரவரி 14ஆம் தேதி, தொடக்கப்பள்ளி 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கதை கூறும் போட்டியின் முதல் சுற்று நடைபெறும்.

பிப்ரவரி 21ஆம் தேதி, தொடக்கப்பள்ளி 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வாசிப்புப் போட்டியின் இறுதிச் சுற்று நடைபெறும்.

பிப்ரவரி 28ஆம் தேதி, தொடக்கப்பள்ளி 1ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாட்டுப் போட்டியின் முதல் சுற்று நடைபெறும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்திற்குமான இறுதிச் சுற்றுப் போட்டிகளும் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் மார்ச் 28ஆம் தேதி நடைபெறும். இவை அனைத்தும் சமூக மன்றத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் சிங்கப்பூரிலுள்ள தொடக்கப்பள்ளிகள் அனைத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன என்றும் பள்ளி முதல்வர் அல்லது தமிழாசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களின் பெயர்ப் பட்டியலுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜனவரி 16) மின்னஞ்சல் அல்லது தொலைப்பிரதி வாயிலாக அனுப்பப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேல்விவரங்களுக்கு 8118 4671 என்ற தொலைபேசி எண்ணில் திரு கி இராமமூர்த்தி அல்லது 9148 2343 என்ற எண்ணில் திரு ச விஜய்யைத் தொடர்பு கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்