காலத்தைக் கடந்து தற்போது மின்னிலக்க வெளியிலும் உலா வரும் பழம்பெரும் நாளிதழான தமிழ் முரசின் வரலாற்றுக் கண்காட்சி, தற்போது ஜூரோங் பொது நூலகத்திற்கு இடம்பெயர்ந்துள்ளது.
ஜூலை 6ஆம் தேதி ஃபேர்மோண்ட் சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவு விழாவின்போது முதன்முதலாக எட்டு வண்ணப் பதாகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
பின்னர் அவை இந்திய மரபுடைமை நிலையத்திற்கும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்திற்கும் இடம்பெயர்ந்தன.
அச்சு கோக்கப்பட்ட அந்தக் காலம் முதல் முழுவண்ணப் பக்கங்கள் அச்சிடப்படும் இந்தக் காலம் வரை பத்திரிகையின் பரிணாமத்தைப் பதாகைகள் காண்பிக்கின்றன.
ஜூரோங் வட்டார நூலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அந்தக் கண்காட்சியைப் பொதுமக்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதிவரை காணலாம்.

