சிங்கப்பூர் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்தார் தமிழக முதல்வர்

1 mins read
83c988e4-4c0f-4a0a-bddf-4a39ad9a5a59
படங்கள்: சமூக ஊடகம் -
multi-img1 of 2

சிங்­கப்­பூ­ருக்கு அதி­கா­ரத்­துவ வருகை மேற்­கொண்­டுள்ள தமிழ்­நாட்டின் முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டா­லின் புதன்கிழமை (மே 24) காலை தெமாசெக், செம்ப்கார்ப், கேப்பிட்டாலேண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகளை சந்தித்துப்பேசினார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் சிங்கப்பூர் வந்துள்ள திரு ஸ்டாலின், அம்மாநிலத்தின் தொழில் சூழலை எடுத்துக்கூறினார்.

சென்னையில் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அவர் அழைப்பு விடுத்தார்.

தெமாசெக் நிறுவனத்திடம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி குறித்தும் தமிழகத்தில் ஏற்கெனவே செய்யப்பட்ட முதலீடுகளை அதிகரிக்கும்படியும் திரு ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

தெமாசெக் நிறுவனமும் தமிழகத்தில் வெவ்வேறு தொழில்துறைகளில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக தமிழக அரசின் அறிக்கை குறிப்பிட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் குறித்த விரிவான விவரங்களுக்கு தமிழ்முரசின் இணையப்பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

குறிப்புச் சொற்கள்