தமிழ்நாட்டின் ‘இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு’ ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக ‘தமிழ்நாடு ஃபேர்புரோ 2025’ (Fairpro Singapore 2025) சொத்துச் சந்தை, மரினா பே சேண்ட்ஸ் வளாகத்தில் மார்ச் 15, 16ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தச் சொத்துச் சந்தை, தமிழ்நாட்டின் 250க்கும் மேற்பட்ட குடியிருப்பு, வணிகத் திட்டங்களைக் காட்சிப்படுத்தும். இவை சுமார் 65க்கும் மேற்பட்ட சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்களின் திட்டங்களாகும்.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற பல நகரங்களிலிருந்து ரூ.2 லட்சம் முதல் ரூ.20 கோடி வரை மதிப்புள்ள சொத்துக்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து வாங்க விரும்புவோர் எல்லா வகை உயர்தர சொத்துக்களைத் தேர்வு செய்ய இந்தச் சந்தை உதவும். மேலும், அவர்கள் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்களைச் சந்தித்து சொத்துச் சந்தையைப் பற்றிய தகவலகள் பெற இயலும்.
கூடுதல் விவரங்களுக்கு https://fairprosingapore.credaitamilnadu.org/ என்ற இணையத்தளத்தைப் பொதுமக்கள் நாடலாம்.

