தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் நன்கு இணைக்கப்பட்ட நகரமாக உருவாகும் தெம்பனிஸ்

2 mins read
ca5cbe6d-480b-4f53-9b45-5118600d8e73
புளோக் 633 தெம்பனிஸ் நார்த் டிரைவ் 2ல் பிப்ரவரி 22ஆம் தேதி ஐந்து ஆண்டு பெருந்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் பே யாம் கெங், டாக்டர் கோ போ கூன், மசகோஸ் ஸுல்கிஃப்லி, டெஸ்மண்ட் சூ மற்றும் டாக்டர் சார்லின் சென். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிஸ் வட்டார நிலையத்தை அடியோடு மாற்றும் பெருந்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தெம்பனிசில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், சிங்கப்பூரின் நன்கு இணைக்கப்பட்ட நகரமாக அதன் நிலையை உறுதிப்படுத்த புதுப்புது உள்கட்டமைப்புகளை அடுத்தடுத்து அறிமுகப்படுத்துவதை எதிர்பார்க்கலாம்.

2027ஆம் ஆண்டுவாக்கில் குடியிருப்பாளர்களுக்கு சைக்கிளில் பயணம் செய்ய மேம்பாலம், ஒரு சுரங்கப்பாதை, 7.7 கிலோ மீட்டர் நீளமுள்ள சைக்கிள் பாதை உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்படும். இது மொத்த சைக்கிள் பாதையின் நீளத்தை 40 கிலோ மீட்டருக்கு அதிகரிக்கும்.

2025 முதல் 2030 வரையிலான நகர மன்றத்தின் ஐந்து ஆண்டு பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக பிப்ரவரி 22ஆம் தேதி புதிய வசதிகள் பற்றி அறிவிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நகரமயமாக்கல் புத்தகத்தில் தெம்பனிஸ் சிங்கப்பூரின் நன்கு இணைக்கப்பட்ட வட்டார நிலையமாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தெம்பனிஸ் குடியிருப்பாளர்களுக்குத் தேவையான அனைத்தும், நகரத்தில் குறுகிய நடை, சைக்கிள் அல்லது பொதுப்போக்குவரத்து தொலைவில் இருக்கும் என்று நகர மன்றம் தெரிவித்துள்ளது.

தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையத்துக்கும் நகரத்தில் உள்ள கடைத் தொகுதிக்கும் இடையே பாதசாரிகளுக்கான பாதை புதிய உள்கட்டமைப்பு வசதிகளில் சேர்க்கப்படும்.

தெம்பனிஸ் வட்டார நிலையம், சிங்கப்பூரின் நன்கு இணைக்கப்பட்ட 20 நிமிட நகரமாக உருவாகும்.

அந்த இருபது நிமிட நகரத்தில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி அல்லது பகிர்ந்துகொள்ளப்படும் போக்குவரத்தைப் பயன்படுத்தி அருகில் உள்ள முக்கிய இடங்களுக்கான அனைத்துப் பயணங்களையும் இருபது நிமிடங்களில் முடித்துவிட முடியும்.

இது, நிலப் போக்குவரத்து ஆணையத்தின் நிலப் போக்குவரத்து பெருந்திட்டம் 2024ல் இடம்பெற்றுள்ள இலக்குகளில் ஒன்றாகும்.

தொடக்க நிகழ்ச்சியில் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வட்டார நிலையமாக தெம்பனிஸ் உருவாவதை பெருந்திட்டம் உறுதி செய்கிறது என்றார்.

இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் உலகத் தரம் வாய்ந்த தெருக்களுடன் பாதசாரிகளுக்கு ஏற்ற நகர மையமாக தெம்பனிஸ் உருவாக குடியிருப்பாளர்கள் இணைக்கப்படுவார்கள் என்று நகர மன்றம் தெரிவித்தது.

பாதசாரிகளுக்கு உகந்த நகரமாக வட்டார நிலையத்தை உருவாக்கும் திட்டம் ஏற்கெனவே வடிவம் பெற்று வருகிறது.

இவற்றுடன் தெம்பனிஸ் சென்ட்ரல் 5ன் ஒரு பகுதியை தெம்பனிஸ் நகர நிலையத்தில் உள்ள கடைத் தொகுதிக்கும் தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையே பாதசாரிகளுக்கான தெருவாக மாற்றுவது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

நகர மன்றம், இத்திட்டத்தையும் உள்கட்டமைப்பு வசதிகளில் சேர்த்துக்கொள்ளவிருக்கிறது.

தெம்பனிஸ் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார இரண்டாம் அமைச்சரும், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு மசகோஸ், பாதசாரிகள் தங்குத் தடையின்றி நடமாடவும் சுறுசுறுப்பான இடமாக வட்டார நிலையத்தை மாற்றவும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்திற்கான திட்டங்களையும் அரசாங்க அமைப்புகள் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்த, ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து மையத்திற்குள், உங்களுடைய குடும்பம் உயிரோட்டமுள்ள வரிசையான கடைகள், கஃபே மற்றும் பசுமையான சூழலில் சிங்கப்பூர் பாணியிலான ஓசாகா தெருச் சந்தையில் உலா வரலாம்,” என்றார் அமைச்சர் மசகோஸ்.

தெம்பனிஸ் வட்டார நிலையத்தின் எதிர்காலத் தோற்றம்.
தெம்பனிஸ் வட்டார நிலையத்தின் எதிர்காலத் தோற்றம். - படம்: தெம்பனிஸ் நகர மன்றம்
குறிப்புச் சொற்கள்