தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதியில் மசெகவின் டெஸ்மண்ட் சூவிற்கு வெற்றி

1 mins read
7ff4ca21-1cb8-4819-8587-90f3c3b26da5
23,802 வாக்காளர்களைக் கொண்ட தெம்பனிஸ் தொகுதியில் டெஸ்மண்ட் சூ, 55% வாக்குகளைப் பெற்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

யுகேஷ் கண்ணன்

இவ்வாண்டு தேர்தலில் புதிதாக அறிமுகம் கண்ட தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் டெஸ்மண்ட் சூ வெற்றி பெற்றுள்ளார்.

23,802 வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் டெஸ்மண்ட் சூ 55% வாக்குகளையும் பாட்டாளி கட்சியின் கென்னத் ஃபூ 45% வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கடந்த இரண்டு தேர்தல்களில் மசெகவின் தெம்பனிஸ் குழுவில் போட்டியிட்ட டெஸ்மண்ட் சூ இம்முறை புதிதாக அறிமுகம் கண்ட இத்தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இவரது தெம்பனிஸ் குழு தேசிய ஒருமைப்பாட்டு கட்சியை 66.4% வாக்குகளுடன் வெற்றி கண்டது.

2011ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் போட்டியிட்ட இவர், ஹவ்காங் தனித்தொகுதியில் பாட்டாளிக் கட்சியின் யாவ் ஷின் லியோங்குடன் மோதி தோல்வி கண்டார்.

முன்னாள் காவல்துறை அதிகாரியும் தற்போதைய தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் உதவித் தலைமைச் செயலாளருமான இவர், இத்தேர்தலில் பாட்டாளிக் கட்சியின் கென்னத் ஃபூவை 10% வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

2015ஆம் ஆண்டு அரசியலுக்கு அறிமுகமான பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழுத் துணை ஒருங்கிணைப்புச் செயலாளர் கென்னத் ஃபூ சென்ற தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் 46.61% வாக்குகளுடன் தோல்வி கண்ட பாட்டாளிக் கட்சி அணியின் உறுப்பினராவார்.

குறிப்புச் சொற்கள்