தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நூறாண்டு பழமைவாய்ந்த சிகிச்சைப் பிரிவுகளை இடிக்கவிருக்கும் டான் டோக் செங் மருத்துவமனை

1 mins read
e785307c-1da3-42a5-a284-38ca7892fcca
எட்டு பெவிலியன் சிகிச்சைப் பிரிவுகள் இடிக்கப்படும். ஒன்று மட்டும் மரபுடைமைச் சின்னமாகப் பாதுகாக்கப்படும். - படம்: டான் டோக் செங் மருத்துவமனை

டான் டோக் செங் மருத்துவமனை அதன் நூறாண்டு பழமைவாய்ந்த பெவிலியன் சிகிச்சைப் பிரிவுகளை இடிக்க இருக்கிறது. எட்டு பெவிலியன் சிகிச்சைப் பிரிவுகள் இடிக்கப்படும். ஒன்று மட்டும் மரபுடைமைச் சின்னமாகப் பாதுகாக்கப்படும்.

அந்த எட்டு பெவிலியன் சிகிச்சைப் பிரிவுகளும் ஜாலான் டான் டோக் செங்கின் கடைசியில், பெசின் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

பழைய சிகிச்சைப் பிரிவுகள் இடிக்கப்பட்டதும், அங்கு நான்கு மாடி இடைக்கால சுகாதாரப் பராமரிப்பு வசதியுடன் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் இரண்டாவது ஆகப் பழைய மருத்துவமனையான டான் டோக் செங் மருத்துவமனை 1844ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

சிங்கப்பூரின் ஆகப் பழைய மருத்துவமனையான சிங்கப்பூர் பொது மருத்துவமனை 1821ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

டான் டோக் செங் மருத்துவமனை தற்போது அமைந்துள்ள பாலஸ்டியர் ஹில் பகுதியில் 1907ஆம் ஆண்டுக்கும் 1931ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்தப் பெவிலியன் சிகிச்சைப் பிரிவுகள் கட்டப்பட்டன.

இந்தச் சிகிச்சைப் பிரிவுகள், 1909ஆம் ஆண்டில் மருத்துவமனையின் பிரதான கட்டடங்களின் ஒரு பகுதியாக இருந்தன.

காசநோய், ரத்தக்கழிசல் ஆகியவற்றால் பாதிப்படைந்த நோயாளிகள் அங்கு தங்கி சிகிச்சை பெற்றனர்.

குறிப்புச் சொற்கள்