செந்தோசாவில் உள்ள தஞ்சோங் பீச் கிளப் கடற்கரை உல்லாச விடுதி, புதுப்பிப்புப் பணிகளுக்காக அக்டோபர் 21ஆம் தேதியன்று மூடப்படுகிறது.
இந்தத் தகவலை தி லோ அண்ட் பிஹோல் குழுமம் செப்டம்பர் 17ஆம் தேதியன்று வெளியிட்டது.
புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு தஞ்சோங் பீச் கிளப் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மீண்டும் திறக்கப்படும்.
புதுப்பிப்புப் பணிகள் குறித்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தஞ்சோங் பீச் கிளப், 2010ஆம் ஆண்டு தஞ்சோங் பீச் வாக் பகுதியில் திறக்கப்பட்டது.
இந்த உல்லாச விடுதி சிங்கப்பூர்கள், வெளிநாட்டவர்கள் இடையே பிரசித்திபெற்றது.
பகல் நேரத்தில் தஞ்சோங் பீச் கிளப்புக்குச் சொந்தமான கடற்கரையோர நீச்சல் குளத்தில் பலர் நீந்தி மகிழ்வது வழக்கம்.
இரவு நேரங்களில் நடைபெறும் விழாக்களுக்கு அது பெயர்போனது.
தொடர்புடைய செய்திகள்
புதுப்பிப்புப் பணிகளுக்காக தஞ்சோங் பீச் கிளப் மூடப்படுவதற்கு முன்பு செப்டம்பர் 28ஆம் தேதியன்று அங்கு ‘கடற்கரை விழா’ ஒன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செந்தோசா தீவில் உள்ள கடற்கரைப் பகுதிகளைப் புதுப்பிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக ‘தி பலவான் அட் செந்தோசா’ உட்படச் சில உல்லாச விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
செந்தோசாவின் தஞ்சோங், சிலோசோ, பலவான் கடற்கரைகளில் பல உல்லாச விடுதிகள் உள்ளன.