வரி ஏய்ப்பு செய்ததாக சமய போதகர் மீது குற்றச்சாட்டு

வரி ஏய்ப்பு செய்ததாக சமய போதகர் மீது குற்றச்சாட்டு

1 mins read
427f90e4-e360-4363-a32a-3b512d8a8374
48 வயது லிம் மீது வரி ஏய்ப்பு தொடர்பாக 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தாவோயிஸ்ட் சமய போதகரான லிம் யென் யி, வருமான வரி செலுத்தும் போது போலியான பதிவுகளை பதிவேற்றம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர் 2014 - 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பலமுறை போலியான பதிவுகளை பதிவேற்றம் செய்ததாகவும் அதன்மூலம் 167,000 வெள்ளிக்கு மேல் மோசடி செய்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் 48 வயது லிம் மீது வரி ஏய்ப்பு தொடர்பாக 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூரரான லிம் ஒரு நிறுவனத்தையும் நடத்தி வந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.

2014ஆம் ஆண்டு லிம் 274,381 வெள்ளி வருமானமாக ஈட்டியுள்ளார். ஆனால் அவர் தமது வருமானம் 121,750 வெள்ளி என்று போலியாக பதிவிட்டு கிட்டத்தட்ட 24,500 வெள்ளி வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்று அரசாங்கத் தரப்பு கூறுகிறது.

இதே தவறுகளை அவர் 2020ஆம் ஆண்டு வரை செய்துள்ளார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

லிம் மீதான வழக்கு விசாரணை ஜூன் 21க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆடவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோ 10,000 வெள்ளி வரையிலான அபராதமோ விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்