தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுங்கத் துறை பெயரில் மோசடி; திருப்பித் தரப்படும் வரி தொடர்பில் மின்னஞ்சல்

1 mins read
ca248a79-c683-4244-affd-647ac4e89347
சுங்கத் துறையிலிருந்து வந்ததைப் போன்று திருப்பித் தரப்படும் வரி தொடர்பான மின்னஞ்சல்களை மோசடி கும்பல் பொதுமக்களுக்கு அனுப்புவதாகச் சுங்கத்துறை தெரிவித்தது. - படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை

சிங்கப்பூர் சுங்கத் துறை பெயரில் நூதன மோசடி நடப்பதாகப் பொதுமக்களை அத்துறை எச்சரித்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் மோசடி கும்பல் இச்செயலில் ஈடுபட்டு வருவதாகவும் அது சொன்னது.

சுங்கத் துறையிலிருந்து வந்ததைப் போன்று திருப்பித் தரப்படும் வரி தொடர்பான மின்னஞ்சல்களை மோசடி கும்பல் பொதுமக்களுக்கு அனுப்புவதாகச் சுங்கத்துறை தெரிவித்தது.

திருப்பித் தரப்படும் வரியைப் பெறுவதற்கான முறையைத் தேர்வுச்செய்யும்படி மோசடி மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, வங்கிப் பரிமாற்றம் அல்லது கடன் அட்டை போன்ற விவரங்கள் அதில் இருக்கும். வரிப் பணத்தைப் பெறுவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் இணையப்பக்கத்தைத் சொடுக்கும்படி மின்னஞ்சலில் மோசடிக்காரர்கள் அறிவுறுத்துவர்.

பண பரிவர்த்தனைகளுக்கு இணையப்பக்கங்களுக்குச் செல்லுமாறு சுங்கத்துறை அனுப்பும் மின்னஞ்சல்களில் இருக்காது. அத்தகைய மின்னஞ்சல்கள் மோசடிக்காரர்களிடமிருந்து வருவது என இதுதொடர்பாக வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 31) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் சுங்கத்துறை பொதுமக்களை எச்சரித்தது.

சிங்கப்பூர் சுங்கத்துறையின் அதிகாரத்துவ மின்னஞ்சல் முகவரிகள் @customs.gov.sg என்ற இணைப்பைக் கொண்டிருக்கும் என்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்குகளிலிருந்து துறைசார்ந்த கடிதங்கள் எதையும் அதிகாரிகள் அனுப்பமாட்டார்கள் என்றும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்