சீனக் கோயில் மீது மோதிய டாக்சி

1 mins read
45af04ec-caed-4219-a5fe-103767621f88
49 வயது பெண் பாதசாரி டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் கூறினர். - படம்: டிக்டாக், இன்ஸ்டகிராம்

கிச்சனர் லிங்க் அருகில் உள்ள சீனக் கோயில் மீது எஸ்எம்ஆர்டி டாக்சி ஒன்று மோதியது.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (ஜனவரி 16) நிகழ்ந்தது.

72 வயது டாக்சி ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார்.

சம்பவம் குறித்து பிற்பகல் 2.50 மணி அளவில் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை தெரிவித்தது.

49 வயது பெண் பாதசாரி டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவர் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

கோயில் உறுப்பினர் ஒருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

டாக்சி கட்டுப்பாடு இழந்து கோயில் மீது மோதியதாக நம்பப்படுகிறது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோயில் தற்காலிகமாக மூடப்படுவதாக 56E மார்ன் சாலையில் உள்ள கோயிலின் நிர்வாகம் தெரிவித்தது.

கோயிலைக் கூடிய விரைவில் திறக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அது கூறியது.

குறிப்புச் சொற்கள்