தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விபத்தில் சிக்கிய டாக்சி ஓட்டுநரும் பயணியும் மருத்துவமனையில் அனுமதி

1 mins read
006082a7-fd9e-4776-a568-d6f126732849
மார்ச் 17ஆம் தேதி இரவு சுமார் 11.15 மணியளவில் சிராங்கூன் சாலையை நோக்கிச் செல்லும் அப்பர் சிராங்கூன் சாலையில் நடந்த விபத்து குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. - புகைப்படம்: பெஹ் சியா லோர் - சிங்கப்பூர் ரோட்/ஃபேஸ்புக்

சிராங்கூனில் டாக்சியும் மற்றொரு காரும் மோதிக்கொண்ட விபத்தில், 49 வயது டாக்சி ஓட்டுநரும் அந்த வாகனத்தில் பயணம் செய்த 44 வயது பெண் பயணியும் சுயநினைவுடன் இருந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பெஹ் சியா லோர் –சிங்கப்பூர் ரோட் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட விபத்து குறித்த புகைப்படம், கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சியின் பின்பக்கம் (boot) பலத்த சேதமடைந்திருப்பதைக் காட்டுகிறது.

புகைப்படத்தின் வலதுபுறத்தில் உள்ள ஒரு கறுப்புக் காரின் முன்புறம் உள்ள ‘பம்பர்’ என்ற மோதல் தடுப்புச் சாதனம் சேதப்பட்டுள்ளதும் தெரிகிறது.

மார்ச் 17 அன்று இரவு 11.15 மணியளவில் அப்பர் சிராங்கூன் சாலையை நோக்கிச் செல்லும் சிராங்கூன் சாலையில் நடந்த விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கும் அதே நேரத்தில் விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், டாக்சி ஓட்டுநரும் அவரது பயணியும் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

48 வயது கார் ஓட்டுநர் நடந்து வரும் காவல்துறையின் விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.

மேலும் விவரம் பெற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கம்பர்ட் டெல்குரோவைத் தொடர்பு கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்