தெக் வாயில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 71 வயது டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
அவ்வட்டாரத்தில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சி கழக புளோக் ஒன்றிற்குக் கீழே இருக்கும் நடைபாதையில் வாகனத்தை அந்த டாக்சி ஓட்டுநர் மோதியதாகக் கூறப்படுகிறது.
புளோக் 122 தெக் வாய் வழித்தடத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு மார்ச் 10ஆம் தேதி இரவு 9 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
அப்பகுதி குடியிருப்பாளரான திருவாட்டி ஷி, தனது வீட்டிலிருந்து வெளியே பார்த்தபோது தரைத் தளத்தில் டாக்சி ஒன்று நின்றுகொண்டிருப்பதைக் கவனித்ததாகவும் சம்பவ இடத்தைக் காவல்துறை சுற்றி வளைத்திருந்ததாகவும் ‘சின் மின்’ நாளிதழிடம் கூறினார்.
சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சேதமடைந்த முன்பக்கத்துடன் நீல நிற ‘கம்ஃபோர்ட்டெல்குரோ’ டாக்சி ஒன்று நின்றிருப்பதைக் காண முடிந்தது.
இதுகுறித்து மேல்விவரங்களுக்கு ‘கம்ஃபோர்ட்டெல்குரோ’ நிறுவனத்தை ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தொடர்புகொண்டது.