ஆர்ச்சர்ட் சாலையில் 26 வயது பெண் ஒருவர் சாலையைக் கடந்துகொண்டிருந்தபோது அவர் மீது டாக்சி ஒன்று மோதியது.
இந்தச் சம்பவம் நவம்பர் மாதம் 13ஆம் தேதி அதிகாலை 3.15 மணி அளவில் ஆர்ச்சர்ட் சாலைக்கும் ஹேன்டி சாலைக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நிகழ்ந்தது.
பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்காக அமைக்கப்பட்ட இடத்தில் அவர் விபத்துக்குள்ளானதாக அறியப்படுகிறது.
அப்பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அந்தப் பெண் மீது டாக்சி மோதியதைக் காட்டும் காணொளி எஸ்ஜி ரோடு விஜிலான்ட்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
விபத்து நிகழ்ந்ததை அடுத்து , சாலையில் விழுந்து கிடந்த அப்பெண் அதிர்ச்சியில் செய்வதறியாது தவித்ததையும் அப்போது அவருக்கு உதவி செய்ய ஆடவர் ஒருவர் அவரை நோக்கி விரைந்ததையும் காணொளியில் காண முடிந்தது.
அப்பெண் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
67 வயது டாக்சி ஓட்டுநர் விசாரணையுடன் உதவி வருவதாகக் காவல்துறை கூறியது.

