பாலர் பள்ளி சிறார்களைக் கடுமையாக நடத்திய ஆசிரியை பணிநீக்கம்

2 mins read
e8d72783-0e9c-4963-b6a7-ae2573a80ce0
படம்:  - பெக்சல்ஸ்

சிங்கப்பூரில் பாலர் பள்ளியில் சிறாரைக் கடுமையாக நடத்திய ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதேப் பள்ளியில் ஆசிரியர் அல்லாத ஊழியராகப் பணிபுரிந்த 59 வயது ஆடவர் 14 வயது சிறுமி ஒருவரை மானபங்கம் செய்ய முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த ஆடவர், இதே பள்ளியில் இரண்டு வயது சிறுமி ஒருவரை மானபங்கம் செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஆசிரியை ஒருவர் சிறார்களைக் கடுமையாக நடத்துவதாகப் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்புக்குப் பெயர் குறிப்பிடவிரும்பாத நபர் ஒருவர் செப்டம்பர் 8ஆம் தேதி புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த ஆசிரியைக்கு எதிரான ஆதாரங்களைச் செப்டம்பர் 13ஆம் தேதி அமைப்பு கண்டறிந்தது.

அவரைப் பணி நீக்கம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட பாலர் பள்ளிக்கு உத்தரவு பிறப்பித்தாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அமைப்பு தெரிவித்தது.

அந்த பாலர் பள்ளி இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபரை ஆசிரியர் பணியிலிருந்து செப்டம்பர் 20ஆம் தேதி நீக்கியது.

மேலும், அந்த ஆசிரியை மற்ற பாலர் பள்ளிகளில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டாது என்று அமைப்பு சொன்னது.

காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, விசாரணைத் தொடர்கிறது.

தொடர்புடைய செய்திகள்

பாதிக்கப்பட்ட சிறார்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக அந்தப் பாலர் பள்ளியின் பெயர் வெளியிடப்படவில்லை.

பாலர் பருவ மேம்பாட்டு அமைப்புடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும் எதிர்பாராத விதமாக நடந்த இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்புத் தெரிவித்துகொள்வதாகவும் பாலர் பள்ளியின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அளித்த அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், “இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் இந்தச் சம்பவம் குறித்து விரிவாகச் செப்டம்பர் 21ஆம் தேதி பள்ளி எடுத்துரைத்தது,” என அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தைப் பள்ளி எப்படி கண்டறிந்தது என்பது பற்றியும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அவர்களிடம் தெளிவாகப் விளக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்