சிங்கப்பூர் பூல்ஸ் கட்டமைப்பில் கோளாறு: 3,000 சீட்டுகளுக்கு இரட்டிப்பு பரிசுத் தொகை

சிங்கப்பூர் பூல்ஸ் கட்டமைப்பில் கோளாறு: 3,000 சீட்டுகளுக்கு இரட்டிப்பு பரிசுத் தொகை

1 mins read
a3737ded-c274-49ab-9a8a-810fa7a90c2f
கோளாறு சரிசெய்யப்பட்டு வருவதாக சிங்கப்பூர் பூல்ஸ் கூறியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பூல்ஸ் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 3,000 சீட்டுகளுக்கு இருமுறை பரிசுத்தொகை தவறுதலாக வழங்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (பிப்ரவரி 11) காலை ஏற்பட்ட அந்தத் தொழில்நுட்பக் கோளாற்றால் 13,000 சீட்டுகள் பரிசுக் குலுக்கலுக்குப் பதிவாகவில்லை.

அன்றைய தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரை தனது கணினிக் கட்டமைப்பு வசதிகள் கிடைக்கவில்லை என்று சிங்கப்பூர் பூல்ஸ் மறுநாள் தெரிவித்தது.

அதன் காரணமாக, இணையம் வாயிலாகவும் சில்லறை விற்பனைக் கடைகளிலும் வாங்கப்பட்ட 13,000 பரிசுச் சீட்டுகள் கணினியில் பதிவாகவில்லை என்று அது விளக்கியது.

இருப்பினும், பதிவாகாத சீட்டுகளுக்குப் பரிசு கிடைத்ததற்கான சான்று அல்லது ஆதாரத்தை அளித்தால் அதனை மதித்து அதற்கேற்ப செயல்பட, தான் தயாராக இருப்பதாகவும் சிங்கப்பூர் பூல்ஸ் கூறியது.

இணையம் வாயிலாக சீட்டுகளை வாங்கியோருக்கு கோளாறு குறித்துத் தெரிவித்து வருவதாகவும் தவற்றைத் திருத்தும் பணியில் இறங்கி இருப்பதாகவும் அது மேலும் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்