கடந்த 2018ஆம் ஆண்டில் தன் இளைய சகோதரியை மானபங்கப்படுத்தியபோது இளையர் ஒருவர்க்கு வயது 12 மட்டுமே.
நீதிமன்ற ஆவணங்களில் அந்தச் சகோதரி ‘வி1’ என்று அடையாளப்படுத்தப்பட்டார்.
அதன்பிறகு, ‘வி1’ஐ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அவன், மற்றோர் இளைய சகோதரியான ‘வி2’ஐ 2020லும் 2021லும் பலமுறை மானபங்கப்படுத்தினார்.
இப்போது, அவ்விரு சகோதரிகளில் ஒருவர்க்கு 14 வயதும் மற்றொருவர்க்கு 15 வயதும் ஆகின்றன.
இப்போது 18 வயதான அந்த இளையர், ஒரு சகோதரியுடன் வல்லுறவு கொண்டதையும், மற்றொரு சகோதரியை மானபங்கப்படுத்தியதையும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
அவ்விரு சகோதரிகள் தொடர்பான பாலியல் ரீதியான மற்ற ஐந்து குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் கொள்ளப்படும்.
அவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், குற்றமிழைத்த இளையரின் பெயர் வெளியிடப்படவில்லை.
அவர் தன் சகோதரிகளுடனும் தாயாருடனும் வசித்துவந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
தொடர்புடைய செய்திகள்
அவரை நன்னடத்தைக் கண்காணிப்பின்கீழ் வைப்பது, சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்புவது ஆகியவற்றின் தொடர்பில் மதிப்பீடு செய்யவேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்பப்படும் குற்றவாளிகள், கடுமையான நடைமுறையைப் பின்பற்றும் நிலையம் ஒன்றில் தடுத்துவைக்கப்படுவர்.
அந்த இளையருக்கு வரும் நவம்பர் மாதத்தில் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.