கடந்த 2021ஆம் ஆண்டு ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவரின் இறப்பிற்கு அதே பள்ளியில் பயின்ற இன்னொரு மாணவரே காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது.
அந்த மாணவர் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய நிலையில், இப்போது அது கொலைக்கு ஈடாகாத அதே நேரத்தில் மரணம் விளைவிக்கும் குற்றச்செயலைப் புரிந்ததாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இப்போது அந்த இளையருக்கு 18 வயதானபோதும் குற்றம் புரிந்தபோது அவருக்கு 16 வயதுதான் என்பதால் அவரது பெயரை வெளியிட முடியாது.
18 வயதிற்கும் குறைந்தவர்கள் சிறுவர் மற்றும் இள வயதினர் சட்டத்தின்கீழ் வருவர்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி முற்பகல் 11.16 மணியிலிருந்து 11.44 மணிக்குள் ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியின் கழிவறையில் 13 வயதுச் சிறுவனைக் கழுத்து, தலை, உடற்பகுதியில் கோடரி கொண்டு பலமுறை அந்த இளையர் வெட்டியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வழக்கு ஏப்ரல் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.