ஈசூன் வட்டாரத்தில் 3,500 பெட்டிகளில் இருந்த கள்ள சிகரெட்டுகள் பிடிபட்டன.
சிங்கப்பூர் சுங்கத் துறை அதிகாரிகள், இதன் தொடர்பில் 17 வயது இளையர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
அக்டோபர் 19ஆம் தேதி, ஈசூன் ஸ்திரீட் 42ல் வேன் ஒன்றை ஓட்டி வந்த அந்த இளையர், அதிலிருந்து இறங்கி வேனில் பயணிகள் இருக்கை அமைந்திருக்கும் பக்கமாகக் காத்திருந்தார்.
அதிகாரிகள் அவரை நெருங்குமுன் மற்றோர் ஆடவர் அந்த இளையரை அணுகுவதைக் கண்டனர்.
அந்த வேனிலிருந்து 1,580 பெட்டிகளில் இருந்த கள்ள சிகரெட் பெட்டிகளும் $5,857 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தப் பணம் கள்ள சிகரெட்டுகளை விற்பனை செய்ததன் மூலம் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இளையரைக் கைது செய்த சுங்கத் துறை அதிகாரிகள், அவர் உரிமமின்றி வாகனம் ஓட்டியதற்காக போக்குவரத்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இரண்டாவது ஆடவர் விசாரணையில் உதவிவருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
அதே நாளில் ஈசூன் அவென்யூ 1ல் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட மற்றொரு சோதனையில் ஆளில்லா வேன் ஒன்றிலிருந்து 1,920 பெட்டிகளில் கள்ள சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்விரண்டு சோதனைகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள சிகரெட்டுகள் மூலம் ஏய்க்கப்பட்ட தீர்வை, பொருள்,சேவை வரி ஆகியவற்றின் மொத்த மதிப்பு $425,390 எனத் தெரிவிக்கப்பட்டது.