ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் சக பள்ளி மாணவர் ஒருவரைக் கொன்ற 16 வயது இளையர், தமது சிறைத் தண்டனை காலத்தைக் குறைக்கும்படி நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூலை 1) மேல்முறையீடு செய்துள்ளார்.
2021ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை சம்பவத்தில் 13 வயது ஈத்தன் ஹன் (Ethan Hun) என்னும் மாணவர் மாண்டார்.
சிறுவர் மற்றும் இளம் வயதினர் சட்டத்தின் கீழ் கொலை செய்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.
முதலில் அந்த இளையர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அது நோக்கத்துடன் கூடிய கொலை என வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த இளையருக்கு 16 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது 19 வயதாகும் அந்த இளையருக்கு இந்த தண்டனை கடினமான ஒன்று என்று இளையரின் வழக்கறிஞர் சுனில் சுதீசன் தெரிவித்தார்.
சுனில் சுதீசனின் வாதத்தை எதிர்த்து அரசாங்க தரப்பும் நீதிமன்றத்தில் வாதிட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம் விரைவில் மேல்முறையீட்டுக்கான தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தது.