தமது உயர்நிலைப்பள்ளிக்கு அருகே 15 வயது மாணவர் ஒருவரைக் குத்திய பதின்ம வயது ஆடவர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 27) சீர்திருத்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அப்போது அந்த ஆடவர் கறுப்பு நிற 'நக்கல் டஸ்டர்' ஆயுதத்தை அணிந்திருந்தார்.
அச்சிறுவனுக்கு இப்போது 18 வயது பூர்த்தியாகிவிட்டது. ஆனால், குற்றம் புரிந்தபோது அவருக்கு 17 வயது என்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. சீர்திருத்த பயிற்சி நிலையத்தில் குறைந்தது 12 மாதங்களுக்கு அவர் தடுத்துவைக்கப்படுவார்.
ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டையும் 'நக்கல் டஸ்டர்' ஆயுதத்தை வைத்திருந்ததாக ஒரு குற்றச்சாட்டையும் அவர் முன்னதாக ஒப்புக்கொண்டார்.
அவருக்குத் தண்டனை விதிப்பதில் மற்ற மூன்று குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.
2021 டிசம்பர் 16ஆம் தேதி காலை 15 வயது மாணவர்கள் இருவருடன் உயர்நிலைப் பள்ளியைவிட்டு புறப்பட்டார். அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அருகில் இருந்தபோது அந்த ஆடவர் அவர்களை எதிர்கொண்டார்.
அந்த மாணவர் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவுடன், அந்த ஆடவர் தமது பாக்கெட்டிலிருந்து கறுப்பு நிற 'நக்கல் டஸ்டர்' ஆயுதத்தை எடுத்தார். அதை தம் வலதுக் கையில் அணிந்து அந்த மாணவரைக் குத்தினார்.
அந்த மாணவருக்கும் அந்த ஆடவரின் காதலியுக்கும் இடையே முன்பு நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் தொடர்பில் அந்த மாணவரை அந்த ஆடவர் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.
அந்த மாணவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய நண்பர்கள் காவல்துறையை அழைத்தனர்.


