தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெமாசெக்கின் $10 பில்லியன் மதிப்பிலான கடன் சேவை நிறுவனம் அறிமுகம்

1 mins read
நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும் வங்கி அல்லாத அமைப்பு
ed3b0fcb-0747-4960-a7ef-e4ab540170ee
புதிய கடன் சேவை நிறுவனத்தின் தொடக்க மதிப்பு $10 பில்லியனாக இருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான தெமாசெக், கடன் சேவை வழங்கும் வங்கி அல்லாத நிறுவனத்தை நிறுவியிருப்பதாக டிசம்பர் 6ஆம் தேதி தெரிவித்துள்ளது.

நேரடி முதலீடுகள், கடன் நிதி ஆகியவற்ற உள்ளடக்கிய அதன் தொடக்க மதிப்பு $10 பில்லியனாக இருக்கும்.

உலகளாவிய நிலையில் நிறுவன முதலீட்டாளர்கள், வளர்ச்சி காணும் இத்தகைய தனியார் கடன் சந்தையில் அதிகமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அமெரிக்காவில் 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட சிலிகான் வேலி வங்கி நெருக்கடியைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. எனவே, பாரம்பரிய முறையிலான கடன் வழங்கும் நிறுவனங்கள் சிக்கலான கடன்களை வழங்குவது தொடர்பான கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், கடன் சேவை வழங்கும் வங்கி அல்லாத நிறுவனங்களின் சேவை அதிகரித்துள்ளது.

புதிய கடன் சேவை நிறுவனத்தைத் தொழில்முறைக் கடன் முதலீட்டாளர்கள் ஏறத்தாழ 15 பேரைக் கொண்ட குழு நிர்வகிக்கும் என்று தெமாசெக் தெரிவித்தது.

நியூயார்க், லண்டன், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் அக்குழுவின் அலுவலகங்கள் அமைந்திருக்கும்.

கடன் நிதிகளில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக முதலீடு செய்வதாகக் கூறிய தெமாசெக் நிறுவனம், அதற்காகவே இயங்கும் தனிப்பட்ட நிறுவனம் இத்துறையில் விரிவுகாணவும் உலகளாவிய வாய்ப்புகளைக் கைப்பற்றவும் உதவும் என்று கூறியது.

குறிப்புச் சொற்கள்