வங்கி, தொலைத்தொடர்பு, இணையச் செயலிகளில் தற்காலிகத் தடை ஏற்பட்டது

வங்கி, தொலைத்தொடர்பு, இணையச் செயலிகளில் தற்காலிகத் தடை ஏற்பட்டது

1 mins read
3a434d08-7364-47db-be8c-fb1dd1fae8ed
ராஃபிள்ஸ் பிளேஸ் எம்ஆர்டி அருகில் மடிக்கணினி, கைத்தொலைபேசியுடன் ஆடவர் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமர்ந்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இணையத்தைச் சார்ந்த பல சேவைகளுக்குத் திங்கட்கிழமை மதியம் தற்காலிகத் தடை ஏற்பட்டது.

அவற்றில் சிங்டெல் தொலைத்தொடர்புச் சேவையே அதிகம் பாதிக்கப்பட்டது.

இத்தகைய இணையத் தடங்கல்களைப் பல அளவுகோல்களைக்கொண்டு கண்காணிக்கும் ‘டவுன்டிடெக்டர்’ தளம், ஸ்டார்ஹப், எம்1 ஆகிய தொலைத்தொடர்புச் சேவைகளுடன், டிஸ்கார்ட், வாட்ஸ்அப் போன்ற குழுவாக உரையாடும் சேவைகளும் தடைக்குள்ளானதாகக் குறிப்பிட்டது.

பிற்பகல் 3.40 மணிக்குத் தடை குறித்த புகார்கள் உச்சத்தை அடைந்து 15 நிமிடங்கள் கழித்துக் குறையத் தொடங்கின.

சிங்டெல் சேவை மட்டும் பகல் 3.42 மணியளவில் 9,800க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றது. இதர சேவைகளுக்கான புகார்கள் 50க்கும் 100க்கும் இடைப்பட்டிருந்தன. பிறகு அவை இரண்டு அல்லது மூன்று என குறைந்தன.

சிங்டெல் குறித்த புகார்களில் பாதி இணையச் சேவை தடை பற்றியவை. தொலைபேசி இணையத் தொடர்பு குறித்து 29 விழுக்காடு புகார்கள் சிங்டெல் நிறுவனத்துக்குச் சென்றன.

ஏறத்தாழ நான்கு மணியளவில், சிங்டெல் புகார்கள் 1,700க்கு குறைந்தன.

மாலை 5:23 மணியளவில் அனைத்துலக தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்துதல் (International traffic optimisation) தொடர்பான சிக்கல் ஏற்பட்டது. அது 15 நிமிடங்களுக்குள் சரி செய்யப்பட்டது. எங்களது உள்ளூர் கட்டமைப்பு சீராகவும் எதிர்பார்த்தபடி இயங்கியும் வருகிறது,” என்று சிங்டெல் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்