ஆளும் மக்கள் செயல் கட்சி கடந்த சில தேர்தல்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக மூன்று இந்திய வேட்பாளர்களை இந்தத் தேர்தலில் புதிதாகக் களமிறக்கி உள்ளது என்பதைப் பார்த்தோம்.
அதேநேரம், ஏழு எதிர்க்கட்சிகள் மொத்தம் 10 இந்திய வேட்பாளர்களைப் புதிதாகக் களமிறக்கி உள்ளன.
பாட்டாளிக் கட்சி, ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி, சீர்திருத்த மக்கள் கூட்டணி ஆகியன தலா இரு இந்திய வேட்பாளர்களையும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, மக்கள் சக்திக் கட்சி, சிங்கப்பூர் ஐக்கிய கட்சி ஆகியன தலா ஓர் இந்திய வேட்பாளரையும் புதிதாகப் போட்டியிடச் செய்துள்ளன.
புதிய எதிர்க்கட்சி வேட்பாளர்களில் மெஹபூப் பாட்ஷா மட்டுமே தனித் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஒவ்வொரு கட்சியும் அறிமுகம் செய்துள்ள இந்திய வேட்பாளர்களும் அவர்கள் களமிறங்கும் தொகுதிகளும் இங்கு தரப்பட்டுள்ளன.
பெரிஸ் வி பரமேஸ்வரி, 51, பாட்டாளிக் கட்சி (ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி)
ஹர்பிரீத் சிங் நேஹால், 59, பாட்டாளிக் கட்சி (பொங்கோல் குழுத் தொகுதி)
ஷரத் குமார், 25, ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி (ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதி)
தொடர்புடைய செய்திகள்
ஹரிஸ் மோகன்தாஜ், 39, ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி (ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத் தொகுதி)
மெஹபூப் பாட்ஷா, 57, சீர்திருத்த மக்கள் கூட்டணி (குவீன்ஸ்டவுன்)
நடராஜன் செல்வமணி, 59, சீர்திருத்த மக்கள் கூட்டணி (தஞ்சோங் பகார் குழுத் தொகுதி)
தமிழ்செல்வன் கருப்பையா, 57, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி (தெம்பனிஸ் குழுத் தொகுதி)
அரிஃபின் ஷா, 27, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி)
தாடியஸ் தாமஸ், 43, மக்கள் சக்திக் கட்சி (அங் மோ கியோ குழுத் தொகுதி)
ரித்வான் சந்திரன், 53, சிங்கப்பூர் ஐக்கிய கட்சி (அங் மோ கியோ குழுத் தொகுதி)
மீண்டும் களம் காணும் 11 பேர்
ஏற்கெனவே தேர்தல் களம் கண்ட இந்திய வேட்பாளர்களில் 11 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். அவர்களின் விவரம் வருமாறு:
பிரித்தம் சிங், 48, பாட்டாளிக் கட்சி (அல்ஜூனிட் குழுத் தொகுதி)
ரவிச்சந்திரன் ஃபிலமன், 56, ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி (நீ சூன் குழுத் தொகுதி)
கலா மாணிக்கம், 57, ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி (ஜூரோங் சென்ட்ரல்)
பால் தம்பையா, 60, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (புக்கிட் பாஞ்சாங்)
ஜேம்ஸ் கோமெஸ், 60, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (செம்பவாங் குழுத் தொகுதி)
பிரபு ராமச்சந்தின், 36, சீர்திருத்த மக்கள் கூட்டணி (தஞ்சோங் பகார் குழுத் தொகுதி)
குமார் அப்பாவு, 56, சீர்திருத்த மக்கள் கூட்டணி (ராடின் மாஸ்)
விக்னேஸ்வரி வி ராமச்சந்திரன், 43, சீர்திருத்த மக்கள் கூட்டணி (ஜாலான் புசார் குழுத் தொகுதி)
ஹரிஷ் பிள்ளை, 65, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (புக்கிட் கோம்பாக்)
எஸ் நல்லகருப்பன், 60, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (சுவா சூ காங் குழுத் தொகுதி)
ஹர்மிந்தர்பால் சிங், 53, சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி (பாசிர் ரிஸ்-சாங்கி குழுத் தொகுதி)