தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்போஸ்ட்டின் அடுத்த தலைவராகிறார் டியோ சுவீ லியென்

1 mins read
f0f777d0-9316-46ca-915a-507b11117785
திருவாட்டி டியோ சுவீ லியென் (இடம்) சிங்போஸ்ட் நிறுவனத்தின் அடுத்த தலைவராகப் பதவியேற்கவுள்ளார். ஒன்பது ஆண்டுகள் சிங்போஸ்ட் தலைவராகப் பதவி வகித்த திரு சைமன் இஸ்ரேல், 72, ஓய்வுபெறவுள்ளார். - படங்கள்: சிங்போஸ்ட்

சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் பல்லாண்டு காலமாக பணியாற்றிய திருவாட்டி டியோ சுவீ லியென், சிங்போஸ்ட் நிறுவனத்தின் அடுத்த தலைவராகப் பதவியேற்கவுள்ளார்.

ஒன்பது ஆண்டுகள் சிங்போஸ்ட் தலைவராகப் பதவி வகித்துள்ள திரு சைமன் இஸ்ரேல், 72, ஓய்வுபெறவுள்ளார். அடுத்த பொதுக் கூட்டத்துக்குப் பிறகு திருவாட்டி டியோ, 65, தலைவர் பொறுப்பை ஏற்பார் என சிங்போஸ்ட் புதன்கிழமை (மே 21) தெரிவித்தது.

திருவாட்டி டியோ சுயேச்சையற்ற, நிர்வாக சார்பற்ற இயக்குநராகவும் இருப்பார். நிதி, முதலீட்டுக் குழு, இழப்பீட்டுக் குழு, பரிந்துரைகள், நிறுவன நிர்வாக விதிமுறைகள் குழு ஆகியவற்றின் கூடுதல் உறுப்பினராக அவர் நியமிக்கப்படுவார்.

திருவாட்டி டியோ, சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் நிதிச் சேவைகள் துறையில் 27 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். 2013 முதல் 2015 வரை சிங்கப்பூர் நாணய ஆணைய சிறப்பு ஆலோசகராக இருந்து இயக்குநர் அலுவலகத்தை நிர்வகித்தார்.

நிதி மேற்பார்வைக்கான துணை நிர்வாக இயக்குனர் உட்பட சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் மற்ற மூத்த பொறுப்புகளையும் அவர் வகித்தார்.

உத்திபூர்வ மறுஆய்வையும் மறுசீரமைப்பையும் செய்துவரும் சிங்போஸ்ட், இன்னும் புதிய தலைமை நிர்வாகியை நியமிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்