கூட்டுரிமை வீட்டில் கரையான்: நிர்வாகம்மீது தம்பதி தொடுத்த வழக்கில் வெற்றி

கூட்டுரிமை வீட்டில் கரையான்: நிர்வாகம்மீது தம்பதி தொடுத்த வழக்கில் வெற்றி

2 mins read
f7a807a7-9308-4b4c-b795-785ce0c7d079
கிளமெண்டியில் உள்ள ஃபிரீசியா உட்ஸ் கூட்டுரிமை தனியார் வீடுகளின் முகப்பு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிளமெண்டியில் உள்ள ஒரு கூட்டுரிமை வீட்டில் கரையான்களால் பெருமளவு பாதிப்படைந்த வீட்டு உரிமையாளர்கள் அக்கட்டட நிர்வாகம்மீது வழக்குத் தொடுத்தனர்.

அவற்றை அகற்ற தங்களுக்கு ஏற்பட்ட செலவுகளை ஈடுசெய்ய அவர்கள் அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுத்தனர்.

ஃபிரீசியா உட்ஸ் கூட்டுரிமை வீடுகளின் (கொண்டோமினியம்) கூட்டுரிமை பட்டாக் கழக நிர்வாகம், வீட்டு உரிமையாளர்கள் அனுமதியின்றி சட்டத்துக்கு எதிராக சமையலறை ஒன்றை வடிவமைத்து கரையான்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் வாதாடியது.

இருப்பினும், கட்டட நிர்வாகம் நிலத்தடிக் கரையான்கள் அற்ற சூழலை அங்கு ஏற்படுத்தத் தவறியதாக நீதிமன்றம் தெரிவித்தது.

எனவே, பாதிக்கப்பட்ட தம்பதிக்கு கட்டடத்தின் பட்டாக் கழக நிர்வாகம் இழப்பீட்டுத் தொகையாக $10,978 வழங்கவேண்டும் என்று புதன்கிழமை (ஜூலை 15) தீர்ப்பளிக்கப்பட்டது. அதோடு இதர செலவுகளுக்கு ஈடாக $42,750 கொடுக்கவேண்டும் எனவும் தீர்ப்பில் விதிக்கப்பட்டது.

கரையான்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இதுவரை சிங்கப்பூரில் அறியப்படாத வழக்காக இது அமைந்துள்ளது. கட்டடத்தில் கரையான்கள் புற்று உருவாகாமல் தடுப்பது நிலப்பட்டாக் கழக நிர்வாகத்தின் பொறுப்பு என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

மேலும் கரையான்கள் குறித்து சோதனை நடத்த கட்டட நிர்வாகம் நியமனம் செய்த நிபுணர், ஏற்கெனவே அக்கட்டடத்தில் பல ஆண்டுகளாக சோதனைகள் மேற்கொண்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

அந்த நிபுணர் அவரது சோதனைகளில் நிலத்தடி கரையான்கள் அங்கு பெருகி வருவதைக் கண்டறியத் தவறிவிட்டார் என்று தெரிகிறது. நிலத்தடியில் உள்ள கரையான்கள் எப்படி மேல்மாடிவீட்டுக்குச் செல்லமுடியும் என்று நிர்வாகத் தரப்பில் வாதாடப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தம்பதிகள் தரப்பில் கருத்துரைத்த பூச்சியியல் நிபுணர் டே ஜோ லின், சில மாடிகளைத் தவிர்த்து சில நேரங்களில் கரையான்கள் செங்குத்தாக மேல்மாடிகளுக்குச் செல்வது இயற்கையான ஒன்று என்றார்.

கரையான்களைப் பொறுத்தவரை, கட்டட நிர்வாகம் அடிக்கடி சோதனைகள் நடத்துவது, அவை இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக நிலத்தடி கரையான்களை முழுமையாக அழிக்கும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பலகட்ட செயல்பாடுகளை செய்தல் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

தம்பதிகள் நிலப்பட்டாக் கழக நிர்வாகச் சட்டத்துக்குப் புறம்பாக எந்தச் செயலையும் செய்யவில்லை எனவும் நீதிபதி கூறினார்.

குறிப்புச் சொற்கள்