சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம், தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து தந்தை பெரியாரின் 147ஆம் பிறந்தநாள் விழாவை வரும் புதன்கிழமை (செப்டம்பர் 17) இரவு 7 மணிக்கு 100, விக்டோரியா சாலையில் அமைந்துள்ள சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் ஐந்தாவது தளத்தில் உள்ள பாசிபிலிட்டி அறையில் கொண்டாட உள்ளது.
இவ்விழாவில் ஆசிரியர்களுக்கும் அவர்களது பரந்துபட்ட சமூகத்திற்கும் ஏற்ப கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ‘சுவடுகள் சுட்டும் நாளைய உலகம்: வரலாற்றுப் பார்வையில் சிங்கப்பூர் தமிழரின் அனுபவங்கள்’ (ஆசிரியர்- நளினா கோபால்) மின்னூல் குறித்த ஆய்வு நடைபெற உள்ளது.
மேலும் இவ்விழாவில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் ஆலோசகர் திரு. சி. சாமிக்கண்ணு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தின் துணையாசிரியர் திரு சிவானந்தம் நீலகண்டன் நூல் ஆய்வுரையை வழங்குகிறார்.
கதை சொல்லி சங்கீதா இராஜராஜன் நூலைப்பற்றிக் கதை வடிவில் கூறவிருக்கிறார்.
அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் அன்புடன் அழைக்கிறது.
அனைவருக்கும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு செயலாளர் தமிழ்ச்செல்வி 90622301.