தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நாணயக் கொள்கையில் மாற்றம் இருக்காது’

1 mins read
7a543e58-cb41-4801-982e-d1595e98837d
சிங்கப்பூர் நாணய ஆணையம், நாணயக் கொள்கை மாற்றாமல் வைத்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பணவீக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் மத்திய வங்கியின் நாணயக் கொள்கையில் மாற்றமிருக்காது.

தங்குமிடங்கள், தனியார் போக்குவரத்துத் துறை நீங்கலாக மூலதாரப் பணவீக்கம் இவ்வாண்டு இறுதியில் மேலும் குறைந்து கிட்டத்தட்ட இரண்டு விழுக்காடாக இருக்கும் என எதிர்பாக்கப்படுவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியது.

அதே சமயத்தில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது என்று அது மேலும் தெரிவித்தது.

“உலகளாவிய தேவை பலவீனமடையவில்லை எனில், பொருளியல் ஒரு நிலையான வேகத்தில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து 2025ல் அதன் சாத்தியமான வளர்ச்சிப் பாதையில் இருக்கும்.

இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், நாணயக் கொள்கைகள் தற்போதைய நடுத்தர கால நிலையான விலையுடன் ஒத்துப்போவதாக ஆணையம் மதிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரின் மத்திய வங்கி தொடர்ந்து கொள்கையை மாற்றாமல் நிலையாக வைத்திருப்பது இது ஆறாவது முறையாகும்.

ராய்ட்டர்ஸ் பத்து நிபுணர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், ஒன்பது பேர் ஆணையம் நாணயக் கொள்கையை மாற்றாமல் வைத்திருக்கும் என்று தங்களுடைய கணிப்பில் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரின் நாணயக் கொள்கை, மற்ற நாடுகளைப் போல வட்டி விகிதத்தைப் பயன்படுத்தாமல் நாணய மாற்று விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது.

சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளின் நாணங்களுக்கு நிகராக சிங்கப்பூர் வெள்ளி வலுவடைவதையும் பலவீனமடைவதையும் ஆணையம் அனுமதிக்கிறது.

ஆணையம், கடந்த 2022 அக்டோபரில் நாணயக் கொள்கையை கடுமையாக்கியது.

குறிப்புச் சொற்கள்