வியட்னாமைச் சேர்ந்த பதின்மவயது இளைஞர் நியூட் ஆன், இரண்டு ஆடவர்களுடன் இணைந்து $350,000 திருடியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
திருடப்படும் பணம் கணக்கில் வராத தொகை; அதனால் அதன் உரிமையாளர் புகார் தரமாட்டார் என்று கூறியதால் திருட்டில் ஈடுபட்டதாக ஆன் கூறினார்.
திருட்டுச் சம்பவம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி நடந்தது. அப்போது ஆன்க்கு 18 வயது.
பணம் திருடப்பட்ட அடுத்த நாளே அதன் உரிமையாளர் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். அதன்பின் ஆன் அதிகாரிகளிடம் சிக்கினார்.
ஆடவரிடம் மருத்துவ சோதனை நடத்தப்பட்டபோது அவர் போதைப்பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது 19 வயது ஆகும் ஆன், போதைப்பொருள் உட்கொண்டதையும் ஒப்புக்கொண்டார். திருடப்பட்ட பணம் இன்னும் மீட்கப்படவில்லை.
திருட்டில் ஈடுபட்ட மற்ற இரு ஆடவர்கள் சிங்கப்பூரர்கள். 24 வயது டேரன் லிம், 25 வயது டோபியஸ் டானுக்கு இவ்வாண்டு தொடக்கத்தில் தண்டனை விதிக்கப்பட்டது.

