இரண்டு மணி நேரம் நீடித்த தடை

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது

1 mins read
1fa914d3-9a79-484d-9168-0f3b4dd70d1c
ஊட்ரம் பார்க் எம்ஆர்டி நிலையத்தில் பயணிகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமிக்ஞையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் (TEL) எம்ஆர்டி ரயில் பாதையில் உட்லண்ட்ஸ் நார்த், பேஷோர் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை புதன்கிழமை (செப்டம்பர் 17) இரண்டு மணி நேரம் தடைபட்டது.

பிறகு காலை 9 மணியளவில் மீண்டும் தேவை தொடங்கியுள்ளது என்று எஸ்எம்ஆர்டி அறிவித்தது.

முன்னதாக, 27 ரயில் நிலையங்களைக் கொண்ட அந்த ரயில் பாதையில் சேவை மீண்டும் தொடங்கிவிட்டது என்றும் தடைகளின்போது இலவசமாக வழங்கப்படும் இணைப்புப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது என்றும் காலை 8.54 மணிக்குச் சமூக ஊடகத்தில் நிறுவனம் பதிவிட்டது.

கடந்த 12 மணி நேரத்தில் நிகழ்ந்த இரண்டாவது ரயில் சேவைத் தடை இது.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) இரவு மின்கோளாற்றால் கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் அல்ஜுனிட் முதல் தானா மேரா வரை உள்ள ஆறு எம்ஆர்டி நிலையங்களில் சேவைத் தடை ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்