மோசடிக்காரர்களுக்காக பேரளவிலான பணத்தைச் சட்டவிரோதமாக மாற்றிவிட்டதாக சந்தேகத்தின் பேரில் 40 வயது ஆடவர் ஒருவர் வியாழக்கிழமை (டிசம்பர் 5) கைது செய்யப்பட்டார். $217,000க்குமேல் பெறுமானமுள்ள ரொக்கமும் இரு கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மோசடிப் பணத்தை மாற்றிவிட்டதற்காக அதே நாள் வேறு இரு ஆடவர்கள் கைதானதைத் தொடர்ந்து, அந்த ஆடவர் பிடிபட்டதாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இரு கைப்பேசிகள், 51 வங்கி அட்டைகள், $34,700 பெறுமானமுள்ள ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தங்களுக்குச் சொந்தம் இல்லாத வங்கிக் கணக்குகளிலிருந்து மோசடிகள் மூலம் பெறப்பட்டதாக நம்பப்படும் பணத்தை அந்த இருவரும் எடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பணத்தை அவர்கள் மற்ற வங்கிக் கணக்குகளில் வரவு வைத்தனர், அல்லது குற்றக் கும்பல்கள் ஏற்பாடு செய்தவர்களிடம் அதை ஒப்படைத்தனர்.
வங்கிகளின் கணிணி முறையைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக சனிக்கிழமை அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

