கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனையில் 2023, 2024ஆம் ஆண்டுகளில் ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகள் 14 முறை பிறந்துள்ளன. அவற்றுள் மூன்று முறை ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பிள்ளைகள் இயற்கையாகப் பிறந்ததாக அண்மையில் நடைபெற்ற தணிக்கையின்போது அது கண்டறியப்பட்டது.
பிற சந்தர்ப்பங்களில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை முறை மூலம் பிறந்ததாக கே.கே. மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சிம் வென் ஷான் தெரிவித்தார்.
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறப்பது தாய்க்கும் சேய்க்கும் சில அபாயங்களையும் பிரசவத்தின்போது சிக்கல்களையும் ஏற்படுத்துவதாக டாக்டர் சிம் குறிப்பிட்டார்.
மருத்துவமனையில் பேறுகாலத்தில் சேர்க்கப்பட்ட எட்டுத் தாய்மார்களில் நால்வருக்குக் கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்பட்டது.
பிற தாய்மாரிடம் உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரில் அதிக அளவு புரதச்சத்தும் இருப்பது கண்டறியப்பட்டது.
தாய்மாரும் குறைப்பிரசவத்தில் பிள்ளைகளைப் பெறவேண்டிய நிலைக்கு ஆளாகினர். பிரசவத்தின்போது தாயாரோ குழந்தையோ உயிரிழப்பதற்கான அபாயம் அதிகம் இருப்பதால் குறைப்பிரசவத்தில் பிள்ளைகளைப் பெறவேண்டிய நிலைக்குத் தாய்மார் ஆளாகினர்.
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளிடமும் மூளையில் ரத்தக் கசிவு, தாய்ப்பால் குடிப்பதில் சிக்கல்கள், தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய அபாயம் போன்றவற்றுக்கான சாத்தியங்களும் அதிகம் என்று டாக்டர் சிம் தெரிவித்தார். நீண்டகாலத்தில் பெருமூளைவாதமும் ஏற்படக்கூடும்.
கே.கே மகளிர், சிறார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்ற 14 பெண்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் 500 மில்லிலிட்டருக்கும் அதிகமான ரத்தத்தை இழந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் நால்வரிடம் கடுமையான ரத்தப்போக்கு காணப்பட்டது. அத்தகையோர் ஒரு லிட்டருக்கும் அதிகமான ரத்தத்தை இழந்தனர்.
அளவுக்கு அதிகமான ரத்தம் வெளியேறுவது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று டாக்டர் சிம் குறிப்பிட்டார்.