சனிக்கிழமையன்று (ஜூன் 21) உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியைக் கடந்து மலேசியா செல்பவர்கள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
சோதனைச்சாவடியில் மலேசியாவுக்குச் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக சனிக்கிழமை காலை 8.15 மணி அளவில் ஆணையம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
புக்கிட் தீமா விரைவுச்சாலையின் 10A வெளிவாயிலையும் கடந்து வாகனங்கள் வரிசையில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
காத்திருப்பு நேரம் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாகக்கூடும் என்று ஓட்டுநர்களுக்கு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளி விடுமுறை ஜூன் 29ஆம் தேதியுடன் முடிகிறது.
இந்நிலையில், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியிலும் துவாஸ் சோதனைச்சாவடியிலும் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வாரயிறுதியில் இந்நிலை ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

