சிங்கப்பூர் வந்து மோசடிப் பணத்தைப் பெற முற்பட்டதாக மலேசியர் மூவர்மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர் வந்து மோசடிப் பணத்தைப் பெற முற்பட்டதாக மலேசியர் மூவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
55db282b-e0aa-466f-8f0e-ae3ace1eff5e
மோசடிகளில் ஏமாந்தவர்களிடமிருந்து ரொக்கத்தையும் தங்கக் கட்டிகளையும் பெற, சம்பந்தப்பட்ட மூவரும் சிங்கப்பூர் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடிச் சம்பவங்களில் தொடர்புடையதாகக் கூறப்படும் 22 முதல் 24 வயதுக்குட்பட்ட மலேசிய ஆடவர் மூவர்மீது சனிக்கிழமை (ஜூன் 20) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஏமாறியோரிடமிருந்து ரொக்கத்தையும் தங்கக் கட்டிகளையும் பெற, மோசடிக் கும்பல்களின் அறிவுறுத்தலின் பேரில் அந்த மூவரும் சிங்கப்பூர் வந்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்தது.

மோசடிகளில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 23 வயது மலேசிய ஆடவர் ஒருவரைப் பற்றி கிடைத்த தகவலின்படி செயல்பட்ட மோசடித் தடுப்புத் தளபத்திய மற்றும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள், அவருடன் சிங்கப்பூர் வந்த இரு ஆடவரையும் அடையாளம் கண்டனர்.

சிங்கப்பூருக்கு வந்த ஆறு மணி நேரத்திற்குள் அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

மலேசியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மோசடிக் கும்பல் ஒன்றிடமிருந்து உத்தரவுகளைப் பெற்ற அந்த மூவரும், சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் உள்ள தானியக்க வங்கி இயந்திரங்கள் மூலம் பணத்தை எடுக்க முற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சோதனையின்போது அதிகாரிகள் அவர்களிடமிருந்து 69 வங்கி அட்டைகளைப் பறிமுதல் செய்தனர். இருபதுக்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஏறக்குறைய $200,000ஐ பெற வங்கி அட்டைகள் பயன்படுத்தப்பட்டன.

குறிப்புச் சொற்கள்